Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்று இசைஞானியை நேரில் சந்தித்து அவரின் நிகழ்ச்சியை கண்டுகளித்தது என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. தாய் தந்தையில் தொடங்கி, அக்காள் மகள்கள் வரை, அனைவருக்கும் பிடித்து இருந்தது. @seevinஐ சந்தித்தேன். @baraneee, @ikrishS, @vrsaranஉம் வந்திருந்தனர், ஆனால் திடலில் சந்திக்க முடியவில்லை.

அருமையான இசைமாலை. அதில் highlightஏ, நெலா அது வானத்து மேல பாடலை பற்றி, இசைஞானி பகிர்ந்துகொண்ட tidbit தான். தாலாட்டு பாடலாக இருந்ததை, சரியான, குத்து பாட்டாக, அசால்ட்டாக அவர் மாற்றியதை, அவரே அவரின் வார்த்தைகளில் பகிர்ந்துகொண்டது இதோ:

திங்களை நல்லதொரு classic பாடலில் துவக்கலாம் என்று தான் இன்றைய புதிர் வந்திருக்கிறது போலும். இந்த பாடலை கேட்டு வளர்ந்தவன் என்பதைவிட, சுவாசித்து வளர்ந்தவன் என்றே சொல்லலாம். கிண்டலுக்கு சொல்லவில்லை. இந்த பாடலை கேட்டாலே, எனக்கு kindergarten சென்றது தான் ஞாபகத்துக்கு வருகிறது. அன்றைய காலங்களில், பட்டி தொட்டி எல்லாம் வானொலியின் அலைகளால் அழிக்கமுடியா வண்ணம் செதுக்கப்பட்ட பாடல் இது என்று சொன்னால் அது மிகையாகாது.

பல பாடல்களை நாம் பார்த்துவிட்டோம். ஏக்கத்துடன் பெண்கள் பாடுவது போன்ற பாடல்களை நாம் 88/365, மற்றும் 55/365, for example, கேட்டது தான், சிலாகித்தது தான்.

Vani Jayaram

இன்றைய பாடலும் அவ்வகை பாடலே. ஆனால், இவ்வகை பாடல்களுக்கு ஆதார சுருதி என்று கூட சொல்லுமளவுக்கு செம பாட்டு.

இதென்ன ராகம்? சுத்த தன்யாசியா? சும்மா விரக தாபமும் நல்ல தூக்கலா இருக்கற மாதிரி இருக்கே? இதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள் நண்பர்களே.

SoundCloudல் நான் குறியீடு இட்டுள்ளது போன்ற இடங்கள், இந்த பாடல் interludeல் என்னை மயக்கிய விசயங்கள். இந்த stroke-of-genius பற்றி ஒரு கீச்சு கூட நேற்று இளையராஜா நிகழ்ச்சியில் இருந்து போட்டிருந்தேனே? அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு போல வருகிறது பாருங்கள், நிறைவில் வரும் அந்த சிறு கர்நாடக சங்கீத வயலின் பீஸ். ஆனால், முதலில் வருவது சாதாரண group violins. How does he plan these interludes? I mean, how does he segue as though nothing is impossible with entirely different sounding instruments, in an integrated, organic way? Please replay it again and let me know if you are also wondering the same way.

ஆரம்பத்தை பாருங்கள். அந்த group violins. உடனே வரும் அந்த சந்தூர் அடி…செம கெத்து. ஆரம்ப கால ராஜா, Santoorஐ நிறைய பயன்படுத்தியிருப்பது, துல்லியமாக கவனித்தால், அறியலாம். நிலவே முகம் காட்டு என்று பிற்காலத்தில் வந்த எஜமான் மாதிரியான படங்களில் தான், நிறைய பேர் அதிகம் அதை கவனித்திருக்கலாம். ஆனால், ஆரம்ப கால ராஜா பாடல்களை கேட்டுப்பாருங்கள். மனிதர், செம creative ஆக, அடித்து சாத்தியிருப்பார்.

இந்த flute வரும் sequenceஉம் சரி, அதை தொடர்ந்து வரும் violin sequenceஉம், என்றுமே என் நெஞ்சில் சில பல உணர்ச்சிகளை உண்டு பண்ணி, ஆனந்தக்கண்ணீரையே வரவழைத்துவிடும். அந்த அளவுக்கு, இந்த பாடல் சங்கதிகள் என்னை கவர்ந்தது.

இந்த பாடலை பாடியவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இவரைத் தவிர வேறு யாரும் இந்த பாடலை இவ்வளவு சிறப்பாக பாடியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. இவரை பாடவைத்த இசைஞானிக்கு கோடான கோடி நன்றிகள். வாணியம்மா, நீங்கள் இந்த பாடலின் ஜீவனம்மா!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song is from the ace-director Sridhar’s movie, wherein, all the lyrics were penned by Vaalee.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: En Kalyana Vaibogam (என் கல்யாண வைபோகம் உன்னோடு ) from Azhage Unnai Aarathikiren (அழகே உன்னை ஆராதிக்கிறேன்) (1979)

Advertisements