Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

Poor timing. நிறைய நாட்கள் கழித்து, இன்று தான் Pathos song வரணுமா? இருந்தாலும் பரவாயில்லை. இசைஞானி இளையராஜா தானே பாடி இருக்கிறார். So, it is OK.

It’s Maestro Ilaiyaraaja’s night here in Coimbatore!

கனடாவில் முடியாதது, அமெரிக்காவில் முடியாதது, சொந்த ஊர் கோயம்புத்தூரில் நடக்கப்போகிறது என்று நினைக்கும் போது, மகிழ்ச்சியாய் இருக்கிறது. அட இதைத் தான் சொல்றேன்🙂 இந்த Post LIVE ஆகும்போது, கோயம்புத்தூரில் இசைஞானி இளையராஜாவின் இசைமாலை நடக்கவிருக்கிறது. சொந்தங்களுடன் போய் ஆஜராக இருக்கிறேன். நம் நண்பர்கள் சிலரையும் சந்திக்கலாம். பார்ப்போம்.

இசைமாலை இளையராஜா


இந்த பாடல் கொஞ்சம் special. ஒரு ஊர் அல்லது நாடு விட்டு வேறு ஊர் அல்லது நாட்டில் புலம் பெயர்ந்து வாழ்வோர் இந்த பாடலின் வரிகளையும், இசைஞானியின் உருக்கத்தையும் நன்றாக உணர முடியும். ஒரு ஊரை விட்டு வேறு ஊருக்கு போய் குடியேறி, பின்னர் மீண்டும் அந்த சொந்த ஊரையே நினைத்து பார்க்கும் போது, எப்படி அந்த சொந்த ஊர் தான் விட்டுவந்த மாதிரியான நிலையிலேயே இல்லை என்ற உண்மையை தான் நிறைய பேர் நன்கு உணர முடியும். Identity crisis முதல் Reverse Identity crisis என்பது வரை, பற்பல சிக்கல்கள் வருவது இயற்கை.

ஆனால், இந்த பாடலின் சூழ்நிலை வேறு ஒரு tragedy என்றாலும், ஏண்டா இந்த ஊருக்கு வந்தோம்னு ஹீரோ, introspectiveஆ பாடுவது தான் சிறப்பே. இந்த பாடலுக்கு இசைஞானியின் குரலும் பாவமும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.

இந்த பாடலின் மற்றொரு சிறப்பு, இதில் வரும் guitar strumming. பாருங்களேன், இந்த பகுதியிலேயே எப்படி விட்டு அடித்துத் தாக்கி இருக்கிறார் என்று. சோகத்தில், இந்த stringsஐ இப்படி சுழற்றி மீட்டுவதை விட வேறு எது பொருத்தமாக இருக்கும் சொல்லுங்கள்!

கிராமத்தில் இருந்தோ, ஒரு சாதாரண ஊரில் இருந்து வேறு ultra-modern ஊருக்கோ வந்தவர்கள், ஒரு நாள் இல்லாட்டியும் ஒரு நாள், இந்த பாடலை நினைத்தாவது பார்த்திருக்கக்கூடும். :))))

சிறுவாணி வாசத்தை விட்டுவிட்டு சட்டஹூச்சியின் வாசத்தை பிடித்தவன் என்ற முறையில் இதை சொல்கிறேன்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie is precisely the same 3-words of a classic Tamil movie song, sung by TMS for KV Mahadevan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kettum Pattanam Poi (கெட்டும் பட்டணம் போய்) from Unnai Solli Kutramillai (உன்னை சொல்லிக் குற்றமில்லை) (1988)