Tags

, , , , , ,

வணக்கம் நண்பர்களே. இன்று சனி🙂 அப்படி என்றால் …?

அதே தான். கொஞ்சம் உழைக்க வேண்டி இருக்கும். இல்லையா?

ஹோலி ஹோலி ஹோலி, சுப லாலி லாலி லாலி ன்னு பாடிட்டு, இதப் பாடலைனா எப்படி?

இன்றைய பாடலுக்கு வேறு மொழியிலும் ஒரு originalஓ, remakeஓ உண்டு என்று என் memory சொல்லுகிறது. அதை குறித்து தரவுகள் இருந்தால், தயவு கூர்ந்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இது வரை திரையில் பார்த்ததில்லை. பார்க்கப்போய், பாதியிலேயே ஓடி வந்துவிட்டேன். Not too bad, but still…🙂

பாடலின் ஆரம்பம், அருமையான Congo drums + புல்லாங்குழலில் ஆரம்பிக்கும். வயலின்களும் சேர்ந்து, ஒரு அருமையான டூயட்டுக்கு களம் அமைக்க, பாடல் அம்சமாக ஆரம்பிக்கும்.

இந்த குறிப்பிட்ட interludeல், வரும் சாதாரண triple-drums & keyboard இசைக்கருவிகளின் simplicity, என்னை வெகுவாக கவர்ந்த விஷயங்களில் ஒன்று. வயலின் இசையில் மூழ்கிக்கொண்டே புல்லாங்குழலின் இசை எங்கோ மனத்தை கொண்டுசெல்வது, இதமோ இதம்.

அமாம், இந்த பாடலும் எனக்கு ஆல் இந்திய ரேடியோவின் மூலம் மட்டுமே மிகவும் அறிமுகமானது🙂

பாடலின் இசை முடிவடையும் இடத்தில் இருந்து ஹம்மிங் செய்ய முயற்சித்தால், இந்த பாடலை எளிதில் பிடித்துவிடலாம். இந்த பாடலை கேட்டிருந்தால், அது சாத்தியம். இல்லை என்றால், சற்று கடினம் தான்.

ஆனால், அருமையான மெலடி டூயட் பாடலை நீங்கள் கண்டுபிடிக்கப்போகின்றீர்கள் என்பது மட்டும் guarantee.

Have a nice weekend🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Ashwini, who recently succumbed to illness, acted in this duet song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Raajamohini (ராஜமோகினி) from Kaathal Oyvathillai (காதல் ஓய்வதில்லை) (1989)