Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. இன்றைய பாடல் புதிருக்கும், தலைப்புக்கும் நிறையவே பொருத்தம் இருக்கிறது. எப்பவும் அப்படித்தான் என்றாலும், இன்றைக்கு கூடிய பொருத்தம் உண்டு.

இது ஒரு டூயட் பாடல். ஆனால், ஒரு வகை Special டூயட் பாடல். பொதுவாக, டூயட் பாடலில், ஆண்-பெண் குரல்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்துகொண்டு பல்லவி, சரணம் என்று இரண்டிலும் வரும். ஆனால், இந்த பாடலில் அப்படி இல்லை. அருமையான பெண் குரலில், சுத்த தன்யாசி rangeக்கு ஒரு ஏக்கத்தோடு ஹம்மிங் பிறக்க, ஆண் குரல் வெறும் சரணத்தைப் பார்த்துக்கொள்ள, பெண் குரலோ வெறும் பல்லவியை மட்டும் கவனித்துக்கொள்ளும். இப்படியான ஒரு uniqueness இந்த பாடலுக்கு உண்டு. (I can think of another song where the roles were inverted — i.e., the male voice will take care of the Saranams, while the female voice will take care of the Pallavis.)

இந்த பாடலை எத்துணை பேர் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரிய ஆவலாக உள்ளேன். தயவு செய்து, முடிந்தால் அதை குறித்து பின்னூட்டத்தில் சொல்லவும்.

இந்த அருமையான பாடல் வந்த புதிதில், வானொலியிலும் இசைக்க முடியாத நிலை, மக்களும் வேறு பல இசை வடிவங்கள் மீது மூழ்கியிருந்த நிலை, என்று பல்வேறு காரணங்களால் கவனிப்பாரற்று கிடந்தது.

எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிதிருந்ததன் காரணம், இதன் bass. அந்த தபெலாவின் அடியும், அதனோடு வரும் bass-guitarன் bassஉம் தான். இரண்டு interludesஉம் பின்னி படல் எடுத்திருப்பார் இசைஞானி.

இந்த interludeஐயே எடுத்துக்கொள்ளுங்களேன். ஆரம்பத்தில் வரும் group-violins உடனான அந்த percussion அடியை கவனியுங்கள். அது இணையும் அந்த flute interludesஐயும் கவனியுங்கள். வசீகரிக்கும் மகிழ்ச்சியையும் தெறிக்கும் காதலையும் உணர்த்தும் விதமாக வரும் இசையில் அந்த flute தான் 100% romanceஐ அள்ளி வீசும்.

இந்திய சட்டத்தில் 144 ஊரடங்கு உத்தரவு என்ற contextல் வரும். ஆனால், இன்றைய காதல் பாடலில் அவ்வகை ஊரடங்கு உத்தரவு எல்லாம் இல்லை. அதனால் ஜாலியா ரசித்துக்கொண்டே பதிலை அனுப்புங்கள்.

மறந்தால் தானே நினைப்பதற்கு? இந்த பாடலுக்கும் எனக்கும் உள்ள தொடர்பும் அதுவே🙂

🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song is from the movie that has a bird’s name in its title.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ninaikkatha Neram Illai (நினைக்காத நேரமில்லை ) from Thangakili (தங்கக்கிளி) (1993)