Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இந்த ராஜ பயணத்தில், நேற்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்று சொல்லலாம். Tweetup என்றாள் என்னய்யா? என்று நாயகன் திரைப்படத்தில் வரும் டைலாக் போல நமது @RagavanGயிடம் கேட்க, அவர் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று கூட தெரியவில்லை🙂 மிக அருமையான தருணங்கள். நேற்று மாலை, சென்னையில் @Amas32 – @N_Shekar அவர்களின் வீட்டில், @_Santhu, @RajaBalanm, @ThachiMammu, @RagavanG, @PrasannaR_, @TCSPrasan, இவர்களோடு அருமையாக Tweetup நடந்தது. இதோ, சில புகைப்படங்கள் – Link 1 and Link 2.

மிக்க நன்றி. கூடிய விரைவில் இன்னும் பல நண்பர்களை சிந்திப்போம் என்ற மகிழ்ச்சியோடு ஊர் திரும்பவேண்டியது தான் பாக்கி🙂


இன்றைய புதிரின் தலைப்பே பதிலை சொல்லிவிட்டதே. அட, interlude இசை மட்டுமன்றி, பாடல் வரிகளை மந்திரமாகவே ஒதியாயிற்று. உங்கள் பதில்கள் வர வேண்டியது தான் பாக்கி. சரி சரி, அடிக்க வராதீர்கள்.🙂

அருமையான இசை இது. இங்கே, இசைஞானி இளையராஜா, ஒரு மாங்கல்ய மந்திரத்தை ஓதிக்கொண்டே வரும் chorus Babaக்களை சற்று நிறுத்தி, அதை அடுத்து வரும் chorus பாப்பாக்களின் லாலி லாலி லாலி யில் நனைத்து, அருமையான melodyக்குள் கொண்டுபோய் விடுகிறார். இது fusion என்று சொல்லலாமா? தாராளமாக என்று நான் சொல்வேன்.

கர்நாடக சங்கீத முறையில் வரும் மந்திரத்துக்கு மேற்கத்திய percussion beat! அந்த வேகத்தை கணிசமாகக் குறைத்து, அதை முழு மெலடி பக்கம் திருப்பும் அந்த touchதான் எனக்கு இந்த பாடலை மிகவும் பிடிக்க வைத்த காரணங்களில் ஒன்று.

இந்த பாடல் எல்லாம் வெளிவந்த காலத்தில், அதிகம் கேட்பாறற்று போய்விட்டதில் எனக்கு பெரும் வருத்தம் தான். ஆனால், இந்த பாடலை இன்று கேட்டாலும், அடுத்த பாடலுக்கு போகாத வண்ணம் தான் இந்த பாடலின் இசை நம்மை கட்டிப்போட்டுவிடும்.

கேட்டுவிட்டு நீங்களே சொல்லுங்களேன்.

நன்றி. Have a nice Sunday.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

The one-worded title of this movie will remind you of Raja Harichandra!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kanmani Kanmani (கண்மணி கண்மணி ) from Sathiyavaan (சத்தியவான்) (1994)