Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

137/365ல் இசைஞானி இளையராஜாவின் அசத்தல் டப்பாங்குத்து பாடலுக்கு மிக அருமையாக பாடி அசத்தினார் மலேசியா வாசுதேவன். இன்றைய பக்திப்பாடலை பாடியிருப்பவரும் அவரே என்றால், ஆச்சரியமோ ஆச்சரியம் தான். இல்லையா? ஆனால், நாம் இங்கு பேசுவது, மலேசியா வாசுதேவன் என்னும் ஜாம்பவான். இதெல்லாம் அவருக்கு மிகவும் சாதாரணம். இன்றைய தலைமுறை இவரை இன்னும் நன்கு அறிய, இம்மாதிரி compare and contrast செய்வது மிகவும் உதவும்.

நன்றாக யோசித்துப் பாருங்கள். அடுத்தடுத்து, தர்மத்தின் தலைவன் ஒத்தடி ஒத்தடி, ஓரமா ஒத்தடி யை கேட்டுவிட்டு, இந்த பக்திப் பரவசப்பாடலில் மனத்தை இணைத்தால், இவை இரண்டையும் இவரா பாடியிருக்கிறார் என்று நம்மையும் மீறிய ஒரு பரவசம் வந்து நம்மை ஒட்டிக்கொள்ளும்.

இன்றைய பாடல் புதிரில் எல்லா வாத்தியங்களும் உண்டு. செண்டை உட்பட. அடித்து தூள் கிளப்பும் இசையில் இறைவனிடம் இறைஞ்சி நிற்கும் ஒரு தம்பதியின் வலியும், வேதனையும், நம்பிக்கையும் நன்கு தெரியும். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்னும் நம்பிக்கையில், ஒரு குழந்தையின் உயிருக்காக போராடும் தம்பதியினரின் உருக்கத்தை, குரலில் மலேசியா அண்ணனும், இசையில் இசைஞானி இளையராஜாவும் அள்ளி கொடுத்திருப்பார்கள்.

மலேசியா அண்ணன், இந்த பாடலில் கையாண்டிருந்த குரல் மாற்றமானது, பிற்காலத்தில் இவருக்கு ஒரு சரியான மைல்கல் அடையாளமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். காரணம், இந்தக் குரலை, இவர் கொடுத்திருந்தது, ஒரு மாபெரும் சூப்பர் நடிகருக்கு!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie featured Ambika and Pandiyan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Yaavum Neeyappa (யாவும் நீயப்பா) from Vaazhkai (வாழ்க்கை) (1984)