Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இந்தப் பதிவு liveஆகும் போதும், நான் பயணத்தின் நிறைவு பகுதியில் இருப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். அட்லாண்டாவில் இருந்த சமயம் வேலைப்பளுவும், சொந்த விசயங்களில் நேரம் செலவிட இருந்ததாலும், க்ளூக்களை பதிவு செய்ய முடிந்த எனக்கு, விமர்சனங்களை முடிக்கமுடியவில்லை. #365Projectல் மிகவும் testing-time என்றால், இப்படி விடுமுறையில் பயணிப்பதும், அதை எதிர்பார்த்து preparedஆக இருப்பதும் தான் போலிருக்கிறது. 🙂

இந்த விமர்சனம் 33,000-அடியில் துருக்கி நாட்டுக்கு மேலே எழுதியது :)))

நேற்றைய பாடலுக்கு எப்படி வேகமாக விடைகள் வந்ததா அல்லது நிறுத்தி நிதானமாக வந்ததா என்று தெரியவில்லை. அகில இந்திய வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் அது. An awesome song from “Kavariman“.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல, கவியரசு கண்ணதாசனுடன் நெருக்கமாக பணியாற்றிய பஞ்சு அருணாச்சலம், எத்துணை அழகாகவும், ஆழமாகவும் பாடல்களை எழுதக்கூடியவர் என்பதற்கு 132/365 சாட்சி!

இசைஞானியின் இசை ஒரு பக்கம் என்றாலும், பாடலின் வரிகள் இன்னொரு பக்கம் என்னை என்றுமே கவரும். குறிப்பாக,

பூ போலே உன் புன்னகையில் இந்த உலகினை கண்டேனம்மா…என் கண்ணே கண்ணின் மணி நீயே.. கண்ணோடு பாசம் வந்தாடும்போது
நெஞ்சோடு நேசம் ஆறாகுமே
நீ இன்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே…

Just reflect on those powerful lines…You’ll appreciate it even more, when you watch the movie.

இப்போது நான் continue செய்வது சென்னையில் கால்பதித்ததும் முதலாவது 🙂

20121208-110418.jpg

Yay! #365RajaQuiz has come home. வணக்கம் சென்னை!

இன்றைய தலைப்பை பார்த்து யாரும் வெகுண்டெழ வேண்டாம். சொந்த ஊர் பெருமைய பேசலேன்னா தான் தப்பு. பேசினா தான் பிறந்து வளர்ந்த + வளர்த்த மண்ணுக்கு சிறப்பு. இல்லையா?

பாருங்க, அண்ணா பல்கலைக்கழகத்துலயும் சரி, மண்டல பொறியியற கல்லூரியிலும் சரி, அட்மிஷன் கிடைத்தும் அன்னையுடைய “deal” (“will get a Bajaj Super FE, if you continie for another 4 years here in Coimbatore”) எனக்கு பிடித்திருந்தது.

இங்கே ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டும். அம்மாவின் டீல் desperationன் வெளிப்பாடு என்றாலும், அந்த டீல் அவர்கள் கொடுக்காவிட்டாலும் கோவையிலேயே தான் இருந்திருப்பேங்க.

என்ன மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது.

இன்று நினைத்துப்பார்க்கும் போது, அந்த 4 வருடங்களும் சொந்த கோயம்புத்தூரிலேயே கழித்தது எவ்வளவு நிறைவைத் தருகிறது என்று சிலாகிக்காத நேரமே இல்லை.

இன்று மற்ற ஊர்களைப் போல கோயம்புத்தூரும் மாறி அடையாளமே தெரியாமல் போய்விட்டது!

How true it is to think that an emigrant’s land of birth is never the same, the very moment he leaves. Ouch!

ஆக, சொந்த ஊர் பெருமைய எல்லாரும் டமாரா அடித்து பொளந்து கட்டவேண்டும் என்பதே எமது அவா 🙂

You can take away a person from the country, but, not the country away from that person.

என்று, எங்கோ, எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது!

இந்த post liveஆகும் சமயம் கோவையை நோக்கி சென்றுகொண்டிருப்பேன். இந்த பாடலை 70MM அர்ச்சனா திரையரங்கில் முதன்முறையாக கேட்டு, புல்லரித்துப்போனது தான் ஞாபகத்துக்கு வருகிறது.

1999ல் அட்லாண்டாவில் சும்மா ஜாலிக்கு இசைஞானி வானொலி என்று போட்டு நண்பர்களிடம் இந்த பாடலை jinglesஆக போட்டு சத்தாய்த்ததெல்லாம் பசுமையாக நினைவுக்கு வருகிறது.

ஆம், கோரஸ் பாப்பாக்களின் “ஊஊஊஊ”வில் இருந்தும், சந்தூரிலிரிந்தும், தபேலா சகிதமாக, “கோயம்புத்தூர்” ஹீரோ entry கொடுக்க, பாடல் ஆரம்பமாகும் பாருங்க…அங்கேயே அந்த heroவுக்காக whistle அடித்த கூட்டத்தினர் நடுவே சொந்த ஊர் பெருமைக்காக விசில் போட்ட ஆளு தாம்பா நானு…. 🙂

அய்யோ அய்யோ, சிறுபுள்ளத்தனமால்ல இருக்குன்னு புளம்பறவங்க கஷ்டம் புரியுது. அப்ப, பதில சொல்லுங்க. கூடிய விரைவில் சென்னை மக்களுக்கு ஒரு பாட்ட போட்டுடுவோம். சரியா 🙂

Have a nice weekend.

Can’t wait to touchdown at Coimbatore 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Although the song is about Coimbatore’s pride, title of this movie has a different City in Tamil Nadu’s name 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thangame Enga Kongu Naatukku (தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு) from Madurai Veeran Enga Saami (மதுரைவீரன் எங்க சாமி) (1987)

Advertisements