Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நிறைய பேர் இன்னும் 127/365 மற்றும் 128/365ன் தாக்கத்தில் இருந்து மீண்டு வரவில்லை போலும். பின்னூட்டங்களில் அவ்வளவு சிலாகிப்பு. அப்பப்பா… உண்மையிலேயே நல்லாருக்குங்க…உங்க யாரையும் பார்த்ததில்ல நானு…ஆனா, நல்ல உணரமுடியுது. கடவுளுக்கும் ராஜாவுக்கும் நன்றி. 🙂

மிக அருமையான பாடல்கள், அவை இரண்டும், என்றாலும், சற்று கடினமாக இருந்தது என்றே சொல்லவேண்டும். பொதுவாக breathers கொடுப்பது வழக்கம். அதை உணர்ந்தே இன்றைய பாடலை மேகத்தில் வைத்திருந்தேன். நேற்று கர்நாடக சங்கீதம் + நம்ம ஊர் இசை. அப்படி என்றால், இன்று…..? இசைஞானிக்கே உரிய மகத்துவமான Western + நம்ம ஊர் இசை தான்!


நீங்க 88/365 – #365RajaQuiz – இது, சிறகடித்து பறக்கும் சந்தூர் காதல்!லயும் சரி 58/365 – #365RajaQuiz – காதலி விடு தூது.லயும் சரி, பெண்ணின் உணர்வுகளை, ஏக்கமாக வெளிப்படுத்தி அசத்தியிருப்பார் ராஜா.

இன்றும் அவ்வகைப் பாடல் தாங்க.

இதைப்பற்றி நான் விமர்சனம் எழுத ஒன்றும் இல்லை. அந்த அருமையான melodic violins ஏறி இறங்கும் அழகை கவனியுங்கள். உதிரிப்பூக்கள் படத்தில் வரும் அழகிய கண்ணே உறவுகள் நீயே பாடலில் ஒரு செம்மறி ஆட்டுக்குட்டி துள்ளி குதித்து ஓடும் ஒரு ஷாட் கண்ணுக்குள் நிற்கும். அதைப்போல இந்த இசைத் தாலாட்டும், காதுகளில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

  1. மெலடியின் உச்சத்தைத் தோடும் வயலின்கள்.
  2. அதற்கு ஏற்றாற் போன்று கோரஸ் பாப்பக்களின் ஹம்மிங்.
  3. அங்காங்கே மெல்லிய பியானோவின் நொடிப் பொழுது டங் டங் ஒலி.
  4. மெல்லிய புல்லாங்குழல்.
  5. இது ரொம்ப முக்கியம்: நேற்று கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் வந்த கோணாத செங்கரும்பு பாடலிலும் மிருதங்கம் இருந்ததைப் போலவே, இன்றும்! ஆனால் பாருங்கள், இது Westernஐ அடிப்படையாக வைத்து கோக்கப்பட்ட interlude. Can you see, how he weaves his magic? I am sure you can now get a sense for how I choose one clue after the other. என் மனத்தில் ஹம் செய்யப்பட்டு அதையே நான் க்ளூவாக தேர்வு செய்ய இதுவும் ஒரு காரணமோ? தெரியலைங்க.
  6. நேற்றே நான் சிலாகித்தது போல, மிருதங்கம் வந்துவிட்டதல்லவா? பின்ன, இது பயங்கர ஹிட்டுன்னு வேற சொல்லி டயத்த வேஸ்ட் பண்ணனுமா என்ன?

பக்கத்து வீட்டு அக்கா, அண்ணா, அப்பத்தா, அய்யன், எல்லாருக்கும் சொல்லுங்க — #365RajaQuizல தள்ளுபடி விற்பனையா இன்றைக்கு சுலபமான க்ளூ வந்திருக்கு..போய் தாளிச்சுட்டு வந்துடுங்கன்னு சொல்லி கூட்டத்தை அனுப்பி வைங்க. சரீங்களா?

இன்றைய நாள் இனிதான நாளாக இருக்கட்டும். வாழ்க வளர்க!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist for this song is R.V Udayakumar.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vanthathe (வந்ததே) from Kizhakku Vaasal (கிழக்கு வாசல்) (1992)

Advertisements