Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. நேற்றைய புதிர் பாடலுக்கான விடையைப் பார்த்தீர்களா? மறக்காமல் பின்னூட்டங்களையும் சேர்த்து படியுங்கள். குறிப்பாக @kaarthikArul போன்ற நண்பர்கள் எந்த அளவுக்கு சிரத்தை எடுத்து பதில் அளித்தனர் என்பதைக் கண்டால் புல்லரிக்கிறது.🙂

Also, do not miss the detailed comments by @ShivSankar, @maestroworld, and @prasannaR_. Also, many others have captivated us with more links and additional details — all rich with information. Please make good use of it and thanks to our experts🙂


இன்றைய பாடல், ஒரு அருமையான டூயட் பாடல். இதில் உள்ள சிறப்பம்சமே, மிருதங்கம், நாகஸ்வரம் என்ற பாரம்பரியமிக்க இசைக்கருவிகளுடன், பக்கா லோக்கல் சரக்கான கொட்டும், ஏறக்குறைய டப்பாங்குத்து பீலையும் இணைத்து ஒரு டூயட்டாக கொடுத்திருப்பது தான். இந்த விரிவான வரியிலேயே நான் இந்த பாடலுக்கான விடையை சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் இதற்கு விடை என்னவென்று தெரியவில்லை என்றால், இந்தப் பாடலை அவ்வளவாக நீங்கள் கேட்டிருக்கமாடீர்கள் என்று நினைக்கின்றேன்.

பொதுவாக, இசைஞானி மிருதங்கம் உபயோகப்படுத்தியிருக்கும் எல்லா பாடல்களுமே, பயங்கர ஹிட் பாடல்களாக அமையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதற்கு இந்தப் பாடலும் விதிவிலக்கல்ல. ஆரம்பமே சந்தூரில் பிய்த்து உதறி ஆரம்பிக்கிறது பாருங்கள். அத்தோடு வரும் மேளம் அழகோ அழகு. இந்த interlude முழுதும் சந்தூரின் ஆளுமை அதிகம். எங்கே நாகஸ்வரம் மற்றும் மிருதங்கம் என்று தானே கேட்கின்றீர்கள்? பாடலின் தொடக்கத்திலேயே அது தான் வரும்.

இந்த தனித்துவமான அமைப்பினாலே தான் தலைப்பை இவ்வாறு வைத்தேன். இது traditional carnaticஆ? Modern குத்து பாட்டா? இரண்டும் கலந்த டூயட்டா? அப்படி என்றால், எதற்கு இப்படி ஒரு புதுமை கலந்த அமைப்பு? இவ்வாறாக ஏகப்பட்ட கேள்விகள் எனக்கும் உண்டு.

பாடலின் ஒலித்தரம் நன்கு வந்துள்ளது என்று நம்புகிறேன். Give it a try and enjoy this song. Have a nice week ahead.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

One of the singers of this song is SP Shailaja

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Konatha Senkarumpu (கோணாத செங்கரும்பு) from Padikaatha Pannaiyaar (படிக்காத பண்ணையார் ) (1992)