Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வாங்க கண்ணுகளா. நேத்து என்னைய போட்டு என்னமா கலாசிட்டீங்க! இதுல சிலரு, அய்யா, பிற்கால சந்ததிக இதை படித்து பயன்பெற வேண்டி, தஞ்சாவூர் கல்வெட்டு அளவுக்கு எதுலயாவது பதிச்சுடுங்கன்னு வேற, கூடுதல் தமாஷ். இது எல்லாத்துக்கும் hashtag வேற போட்டு, ஒரு தீபாவளி சரவெடியே நடத்தி முடிச்சார் நம்ம @NChokkan. I enjoyed all those humorous tweets. I will storify them 🙂 Thanks for all the fun and humor.

நேற்றைய பாடலில் வந்திருந்த சில பின்னூட்டங்களை தவறவே விட்டுவிடாதீர்கள். அதிலும் நம் @prasannaR_ கொடுத்திருந்த Roller-Coaster உவமை, அருமை. இந்த #365RajaQuizல் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன். அதில், உங்களில் பலர், எத்துணை அழகாக கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றீர்கள், differences of opinionஐ எவ்வளவு நயம்படவும், humorousஆகவும், மரியாதையோடும் அதை எடுத்துரைக்கின்றீர்கள், இசைஞானமும், கலாரசனையும் உள்ளவர்கள் எப்படி பின்னூட்டம் இடுகின்றீர்கள், விடாமுயற்சியுடன் ஒரு focusஓடு விடையை கண்டுபிடிக்க படாதபாடுபடுகின்றீர்கள் என்று பலதையும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். அத்துணை shared experiencesக்கும் வந்தனம்.

இன்றைய பாடல், அருமையான மெலடி டூயட். படத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் பாடலை பார்த்திருக்கிறேன். ஒரு மெல்லிய சோகம் இருப்பது போன்று உணர்வு எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை. நீங்கள் இந்த பாடலை கேட்டுவிட்டு சொல்லுங்கள். டூயட்டில் எதற்கு, இப்படி ஒரு மென்சோகம் இழையோடுகிறது என்று தெரியவில்லை. ஆனால், அருமையான மெலடி. இந்த பாடலையும் Goldwaveல் பிடித்து பதிவேற்றம் செய்ததால், அந்த drums, violins, flutesஐ நன்கு ஆழமாக கேட்டு ரசிக்கலாம். இந்தப் புதிரின் இசையைக் கேட்டபடியே சென்றால், ஹம் செய்தே விடையை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

Violins start and beautifully segue into that lilting flute sequenceங்க. Just அங்கேயே சற்று நேரம் இளைப்பாறி கேட்டு பாருங்களேன். Hmmm..Let’s rewind and start from the beginning. Just see how salubrious the whole experience is — the way it starts with violins and gets to the flute sequence. I love that cadence — literally like a dripping waterfall kind of violin sequence in the beginning. நேற்றைய பாடலில் வந்த வேக அளப்பரையை தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்கு, மென்மையாக போட்டிருப்பார் இசைஞானி. இந்தப் பாடலை நிறைய ஆண்டுகள் கழித்து கேட்பவர்கள் கூட, உடனடியாக continuous-loopல் போடக்கூடிய அளவுக்கு இருக்கும் அருமையான பாடல் இது.

சற்று சுலபமான பாடல் தான். நேற்று என்னை பிடித்து ஓட்டியதற்கு பின்னரும், சரியான lifeline clueவை நான் கொடுக்கவில்லை என்றால், எனக்கு டின் தான் கட்டிவிடுவீர்கள் என்று எனக்கு தெரியாதா? அதனால், இன்று நீங்கள் எல்லாரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு, அம்சமான ஒரு lifeline clue கொடுத்து இருக்கேன். பார்ப்போம், இதற்கு என்ன சொல்கின்றீர்கள் என்று. 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Names of the hero and heroine featured in this song are the prominent characters in Mahabaratha and Ramayana. Song was prominently shot in the locales of Ooty, especially at the Government Botanical Gardens. Movie title will remind you of Probability and Statistics :).

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Manadhile Oru Paatu (மனதிலே ஒரு பாட்டு) from Dhaayam Onnu(தாயம் ஒன்னு ) (1988)

Advertisements