Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இன்றைய புதிருக்குள் நேரடியாக போவோம். எந்த வித distractionம் இல்லாமல். சரியா?🙂

காரணம் ரொம்ப சிம்பிள். இன்றைய புதிரை ஒரு முறை Play செய்யுங்கள். இதுவும் சீசன்-1ல் வந்த ஆ பபபபா மாதிரி தான்.

ஆனால் வேறு விதமான ஆ பபபபா. ஆம். புதிரின் இசைப்படி, இது படு வேகப் பாட்டாகத்தான் இருக்கமுடியும். சரியா?

ஆனால், அது தான் இல்லை. இது பக்கா மெலடி பாடல். ஆரம்பமே, மெதுவாக, மிக மெதுவாக, ஒரு பரம மெலடிப் பாடல் எப்படி ஆரம்பிக்குமா, அப்படித்தான் ஆரம்பிக்கும். பல்லவியில் மிக மெதுவாகவும், சரணத்தில் சூப்பர் ஸ்பீட் ஜெட்டாகவும் சீறிப்பாயும் பாடல் தான் இது. இந்த ஒரு முக்கிய hint உங்களுக்கு இது என்ன பாட்டு என்பதை காட்டிவிடும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

பல்லவியில் இருந்து சரணத்திற்குள் படுவேகம் எடுக்கும் இந்த பாடலில், இந்த interludeக்குள்ளேயே வேகத்தின் பரிமாணத்தை கவனித்தீர்களா? ஆரம்பத்தில் chorus hummingல் ஆ பபபபா மெதுவாக பயணிக்க, நடுவில் வயலின்களிலும், கிடார் இசையிலும் பட்டையைக்கிளப்பும் வேகம் எப்படி?

இசைஞானி இளையராஜா செய்யாத புதுமையே இல்லை. அதிலும், இந்த மாதிரி ஒரு மெலடிப்பாடலில் இப்படி ஒரு வேகத்தைப் புகுத்தி அவர் கலக்கியிருக்கும் பாங்கு, அமைதியாக இந்த பாடலை மட்டும் focus செய்து கேட்டு மகிழும்போது, நாம் ஏன் இதுவரை இந்த பாடலை அந்த விதத்தில் பார்க்கத் தவறினோம் என்று நம்மை நாமே கேள்வி கேட்கலாம்.

அப்படி கேட்கத் தோன்றினால், இனி நாம் கடக்கும் ஒவ்வொரு பாடலுக்கும் அதிகம் கவனம் கொடுத்து கேட்போம் என்று சூளுரைப்போம். என்ன, சரி தானே?🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This was a remake and belonged to the full-length comedy genre.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thaai Ariyaatha (தாய் அறியாத) from Arangetravelai (அரங்கேற்றவேளை) (1990)