Tags

, , , , , , , , , , , , , , , ,

வணக்கம் அன்பர்களே. நேற்றைய பாடல் நிறைய பேருக்கு விருப்பப் பாடல் என்றும், சிலரது பெற்றோர் அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தனர் என்றும் கேள்விப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி.

#365RajaQuiz சீசன் 2ல், உங்கள் ஸ்கோர் என்ன என்பதை இங்கே பார்த்துக்கொள்ளுங்கள். (சிலர் தாமதமாக 114/365 பதிலளித்து இருந்தால், அது கணக்கில் வராமல் இருக்கலாம். பின்னர் வந்துவிடும், கவலை வேண்டாம்.)

இதில் பல பேர் முதலிடத்தில் இருக்கிறீர்கள். மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள். ஆனால், புதிரில் சற்று leveling தேவைப்படுவதையும் காணமுடிகிறது, அல்லவா? எனவே, நான் சற்று freeஆகவும், எந்தவித guilty-feelingஉம் இல்லாமல், பொன்விலங்கு – golden-shackles – பூட்டப்பட்டமாதிரி இல்லாமல், சற்று moderateஆன clues கொடுக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் :). தொடர்ச்சியாக சுலபமானதாகவே கொடுத்துக்கொண்டு வந்தால், புதிரில் ஒரு தொய்வு உங்களுக்கு ஏற்படலாம். வேண்டாமே? சரியா? I hope you can understand and will continue to give me the support. Thanks in advance 🙂

அதேபோல, முடிந்தவரை தயவு செய்து விடைகளை இங்கே WordPressல் பின்னூட்டமாக இட்டால், டேகிங் செய்வது சுலபமாகவும், தவறுகள் நிகழாமலும் இருக்கும். அதேபோல, WordPressல் பின்னூட்டம் இட sign-in தேவை இல்லை. ஆனால், நீங்கள் anonymousஆக பதில் போட்டால், தயவு செய்து உங்கள் username / twitter ID / Some other unique handleஐ மறக்காமல் குறிப்பிடுங்கள். அப்போதுதான் tagging செய்யமுடியும்.

நேற்றைய புதிரில் வந்த பாடலான சந்தோஷம், எல்லாரையும் குளிர்வித்தது. அந்தப் படத்தில் உள்ள இரு வேறு பாடல்கள் — ஊமை நெஞ்சின் சொந்தம் மற்றும் கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். என்றாலும், புதிரில் கேட்ட பாடலை சிலர் பல நாள் கழித்துக் கேட்டதாகவும், சிலர் அதை அவ்வளவாகக் கவனித்ததில்லை, இனி கவனிப்போம் என்றும் எடுத்துக்கொண்டது, மிக்க மகிழ்ச்சியை அளித்தது. புதிரின் நோக்கம் நிறைவு பெற்றது.

அந்த ஊமை நெஞ்சின் சொந்தம் பாடலில் வரும் பெண் குரல் யாருடையது? அந்தப் பாடலை இயற்றியது யார் என்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால், தயவு செய்து பின்னூட்டமாக இடுங்கள். நன்றி.


இன்றைய பாடல் ஒரு குதூகலமான டூயட் பாடல். இந்தப் பாடலில் trumpet கலக்கும். அதோடு, இதில் வரும் violins மற்றும் flute sequence மிக இதமாக இருக்கும். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ஸ்டைல் percussion arrangement போன்ற ஓர் அமைப்பில் இந்தப் பாடல் செல்லும். அருமையான காதல் டூயட். இந்தப் புதிரின் ஆரம்ப இசை ஒரு பாடலையும், இடையில் வரும் இசை, வேறொரு பாடலையும் நினைவுபடுத்தலாம். அதனால், தயவு செய்து, பொறுமையாக கேட்டு, பின்னர் பதில் அளிக்கவும். சரியா?

இந்தப் பாடலின் opening-sequenceமாதிரி, ஒரு பிரமாண்டமான opening prelude அதிகம் பார்த்திருக்கமுடியாது. நொறுக்கித் தள்ளியிருப்பார் தலைவர்.

I have also marked timed-comments on the soundtrack that you may find it interesting. In fact the final 4 repetitious flute-violin sequence is probably the best that makes this interlude a favorite of mine 🙂

Start music :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Although the CD and Cassette versions of this song featured SPB, the movie version had our Maestro Ilaiyaraaja lend his voice to this awesome duet. Song was choreographed in Ooty, amid Eucalyptus trees and horse-rides. And the music will reflect that horse-ride in its arrangement.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Devi Devi (தேவி தேவி நீ எந்தன் தேவி ) from Dharmam Vellum (தர்மம் வெல்லும் ) (1989)

Advertisements