Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஒரு புதிய வாரம் பிறந்திருக்கிறது. இங்கே அமெரிக்காவில், இந்த வாரம் மிக முக்கியமானது. மேலும் இன்று ஆண்கள் தினம்(?). அட, சிரிக்காதீங்க, உண்மையில் அப்படி ஒரு தினம் இருக்குங்க…Today is International Men’s Day. கூடிய விரைவில், புதுமை ஆண் என்று நம்ம பாரதிராஜா படம் கூட எடுக்கவேண்டிய நிலை கூட வரத்தான் போகுது, பாருங்க. ஹஹஹா :)))

இது Thanksgiving என்று சொல்லப்படும் நன்றியறிதல் வாரம். நம்ம ஊர் பொங்கல் திருவிழாமாதிரி என்றும் சொல்லலாம். வாழ்க்கையில் நன்றியோடு நினைத்துப்பார்க்க எவ்வளவோ உள்ளது என்று நிறுத்தி நிதானமாகச் சிந்திக்கவைக்கும் ஓர் அருமையான விடுமுறை இது. America’s greatest President ever — Abraham Lincoln — passed a proclamation for this holiday, amid the tragedy of the US Civil War, I believe. What a coincidence! It was today, when he gave the most famous Gettysburg Address.

President Abraham Lincoln

அதுமட்டுமல்லாமல், பரந்து விரிந்து இருக்கும் அமெரிக்காவில் உறவினர்கள் ஒன்றுகூடி மகிழ்வது இந்த நீண்ட(??) விடுமுறை நாளில்தான். ஆம்! Thanksgiving week is the busiest travel-period in USA, every year. வியாழன் மற்றும் வெள்ளி அநேக பேருக்கு இங்கு விடுமுறை. அதனால் எப்போதும்போல திங்களை வருத்தத்தோடு வரவேற்கும்(!) மனநிலையில் இங்கு நாங்கள் இல்லை 🙂

இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவேண்டாமா? இசைஞானியின் பாடல்களில் மகிழ்ச்சிக்கு ஏது குறை?


அதிலும் இன்று புதிரில் நான் கொடுத்துள்ள பாடல், எனக்குத் தனிப்பட்டமுறையில் மிகவும் பிடித்த மகிழ்ச்சிப் பாடல். சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும் என்ற melancholic moods சில சமயம் எட்டிப்பார்த்தாலும், இந்தப் பாடலைக் கேட்டமாத்திரத்தில் எங்கிருந்து அந்த மகிழ்ச்சி ஓடி வந்து மனத்தில் உட்கார்ந்துகொள்ளும் என்று எனக்கே தெரியாது. ஆனால் அது அப்படி உட்கார்வதுமட்டும் நிச்சயம் 🙂

இந்தப் பாடலை நான் தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணம், இந்த ட்வீட்கள் 🙂

அதாவது, மலேசியா வாசுதேவன் அண்ணன், இசைஞானி இளையராஜா, கவிஞர் வைரமுத்து என்ற முக்கோணத்தின் கைவண்ணத்தில் உருவான வா வா வசந்தமே, சுகம் தரும் சுகந்தமே தான் 2012ல் நம் வீடுகளில் தீபாவளியின் தீப ஒளியை ஏற்றியது என்றால் அது மிகையாகாது. ஒரு வாரத்துக்கு மேலாகியும் இன்னும் சிலாகிப்புடன் இந்தத் தலைமுறையினர் இந்தப் பாடலை ரசித்து எழுதுகின்றனர் என்று நினைக்கும்போது, மனத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி பொங்கி ஓடுகிறது.

அதனால்தான், இன்று இந்தப் பாடலை வழங்குகிறேன் 🙂

இந்தப் பாடலில் இசைஞானியின் மகிழ்ச்சி துள்ளும் இசைக்குத் தன்னுடைய வைர வரிகளால் மகிழ்ச்சியை இன்னும் ததும்பவைத்திருப்பார் கவிஞர் வைரமுத்து. அருமையான பாடல்ங்க. விடையைக் கண்டுபிடித்தவர்களுக்கு நான் சொல்லவருவது உடனே புரியும். விடையை Google ஆண்டவர் துணையோடு தேடும் ’துப்பறியும் சாம்பு’களுக்கு, விடையைக் கண்டுபிடித்தவுடன் அது புலனாகும் 🙂

புதிரின் இந்த interludeல் உள்ள சங்கதிகள்தான் பாடலின் ஆரம்பத்திலும், மடை திறந்து ஓடி வரும் நதி கணக்காக இசை ஊற்று preludeஆக வரும். அப்படி ஓர் அருமையான group violins பீறிட்டுக் கிளம்ப, simple drums & cymbals ஒலிக்க, அருமையான electric guitar இசையும் வரும். அந்த prelude முடிய, பாடல் வரி ஆரம்பிக்கும். முதல் வார்த்தையே மகிழ்ச்சியைக் குறித்து எழுதப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. Happiness and joy is imbued in every aspect of this song 🙂 அந்த அளவுக்கு இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் ஒரு sync of wavelength இருந்திருப்பது பாடலைக் கேட்பவர்களுக்குப் புரியும்.

இந்தக் குறிப்பிட்ட interludeல், ஒரு symphony கணக்காக violins கிளம்புகிறது. அங்கே கிளம்பும் electric-guitarன் இன்னிசையை என்னவென்று சொல்வேனப்பா! ஆஹா. இந்த இசைக்கு இந்த commentary எல்லாம் சுத்த waste :)) கேட்டு ரசிக்க வேண்டிய சங்கதியுள்ள பாடல் இது.

விடை தெரியாதவர்களுக்காக இந்தக் கூடுதல் கொசுறு 🙂 நாயகன் நாயகியை ஓவியமாகத் தீட்டுகிறான். இவளோ ஒரு கனவுக் காட்சிக்குள் போய்விடுகிறாள். ஊட்டி குளிரில் தேயிலைக்காடுகளுக்கு நடுவில் ஜில்லென்று பாடல் பயணமாகிறது. மகிழ்ச்சிப்பெருக்குடன் பாடுகிறாள். யப்பா, நான் உன்கிட்ட ஒரு ஆசை வார்த்தை கேட்க வந்தா, நீ என்கிட்ட உன் காதல் ரிக்வெஸ்ட்டையே வெச்சுட்டியே… நான் இப்ப என்ன பண்ணுவேன்.. என் மனசு சும்மா துள்ளு துள்ளுன்னு துள்ளுதே… இருந்தாலும், இது ஒரு சுகமான சுமைதான் என்ற rangeல் பாடுகிறாள்.

இந்த மாதிரி நாயகிகளுக்கு மகிழ்ச்சி கிளம்பிடுச்சுனா நமக்கெல்லாம் சூப்பர் ஹிட் உண்டு என்பது தெரியாதா? அட, நாமதான் 58/365 – #365RajaQuiz – காதலி விடு தூது மற்றும் 88/365 – #365RajaQuiz – இது, சிறகடித்து பறக்கும் சந்தூர் காதல்!யிலேயே இதைப் பார்த்தோமே? ஞாபகம் இருக்கா?

இம்மாதிரி ஏக்கப் பாடல்களும், மகிழ்ச்சிப் பாடல்களும், சிலருக்குப் பாலைவனத்து ஊற்றுபோல!

இசைஞானி இளையராஜாவுக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும், இந்தப் பாடலை மிகச் சிறப்பாக பாடியவருக்கும் (ஷ்ஷ்.. யாருன்னு இப்ப சொல்லமாட்டேன்.. நீங்க கண்டுபிடிங்க) என்றும் மனமார்ந்த நன்றியும் வந்தனமும். Every ounce of this song fills us with positive energies 🙂

என்ன கண்டுபிடித்துவிடலாம்தானே? பாடலாசிரியர் யார் என்று பகிரங்கமாகவே additional clue கொடுத்தாகிவிட்டது. So, no complaints that today’s clue is tough, OK? 🙂 All the very best! Have a nice week.

Maestro Ilaiyaraaja and Kavignar Vairamuthu

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Radha was featured in this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Santhosham (சந்தோஷம்) from Manithanin Marupakkam (மனிதனின் மறுபக்கம் ) (1986)

Advertisements