Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Before we move to today’s quiz — 7th in Season-2, please take a look at the Ranking position for Season-1 (Clues 1 to 100). Please write to me, if there are any issues.

I am sure, you will be excited to throw your lot behind Season-2 as @rozavasanth avows here 🙂

https://twitter.com/rozavasanth/status/267690984018677760

இது தான் சூளுரை! Super! வாழ்த்துக்கள் நண்பரே! நீங்களும், இறங்கி கலக்குங்கள் :))

இன்றைய புதிருக்குள் போவோம்.


வணக்கம் அன்பர்களே. நேற்றைய க்ளூ மிகவும் சுலபம் என்றும், எனது கணினியை hack செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துகள் நிலவியது ஆச்சரியம்தான். இருந்தாலும், பெரும்பான்மையானோரின் கருத்து, புதிர் சுலபமாக இருந்தது என்பதே. மகிழ்ச்சி 🙂

பண்டிகை நேரம் என்றாலே, சொந்த ஊருக்குப் பயணம் செய்வது, அண்டை அயலாரிடம் பலகாரப் பரிமாற்றம், புது உடை, பட்டாசு, மத்தாப்பு, வெடி, நண்பர்களுடன் விருந்து, etc., etc.,

சரியா?

ஆனால் சிலருக்கு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என்பதெல்லாம் தனிமையிலேயே கழியும். எத்துணை முறை நாம் அவர்களை நினைத்துப் பார்த்திருக்கிறோம்? அது நம் எதிர் வீட்டு Flatல் வசிப்பவராகக்கூட இருக்கலாம். வேறு ஒரு மாநிலத்திலோ, நாட்டிலோ குடும்பத்தை விட்டுவிட்டு வயிற்றுப் பிழைப்புக்காக வந்தவராக இருக்கலாம். அல்லது, உடல்நலமில்லாமல் தனிமையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு நம்பிக்கை என்னும் ஒரே ஊன்றுகோலில் வாழ்கையை நகர்த்திக்கொண்டு இருப்பவராக இருக்கலாம். அல்லது, சிறையில் வாடுபவராக இருக்கலாம். அல்லது, மகன், மகள், பேரன், பேத்தி, ஒருவரும் இல்லாமல் தனிமை இருளில் வாடும் வயதானவர்களாக இருக்கலாம். அல்லது, terminal-condition என்று மருத்துவரால் அதிர்ச்சி diagnosis வாங்கியவராக இருக்கலாம். அல்லது, தாய் தந்தையரை விட்டுவிட்டுத் தனியே வேறு மாநில / நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தனிமையில் வாடும் மாணவராக இருக்கலாம். அல்லது, பல படங்களில் வருவதுபோல, வீட்டை விட்டு ஓடிய காதலன் / காதலியாக இருக்கலாம்…

எது எப்படியோ, தனிமையில் உழன்று வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த தீபாவளி இன்பத்தையும் சந்தோஷத்தையும் கொண்டுவரவேண்டும் என்பதே நம் #365RajaQuizன் விருப்பம். யாரையும் சென்டிமெண்டில் மூழ்கடிக்கவேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. ஆனால், ஒவ்வொரு பண்டிகையின்போதும், நமக்குத் தெரிந்து இம்மாதிரி யாரேனும் தனிமையில் இருந்தால், நம்மால் இயன்ற அளவுக்கு reach-out செய்வது மனிதாபிமானமான செயல்மட்டுமல்ல, சரியான செயலும்கூட. சரியா?

சரி. இப்போது புதிருக்கு வருவோம். இந்தப் புதிரில் வரும் பாடலும், நாயகன் தனிமையில் பாடும் ஒரு பாடல்தான். குழந்தைகள் தினம் வேறு இந்த வாரம் வருகிறது. எனவே, தீப ஒளித் திருநாளாம் இந்த பண்டிகை நாளிலே, தீபத்தின் ஒளியாக விளங்கும் நம் குழந்தைகளுக்காக இந்தப் பாடல் வருவதாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்ப இசை, குழந்தைகளின் அந்த innocenceஐப் படம்பிடித்துக் காட்டும் இசை. அதற்குப் பக்கபலமாக வருவது, violin இசை. தனிமையின் இருளை உணர்த்தும் flute அதைப் பின்தொடர்ந்து நிறைய நேரத்துக்கு வருவது சிறப்பு. இறுதியில், ஆரம்பித்தமாதிரியே, அந்த childlike interlude வருகிறது.

இந்தப் பாடலை பாடிய பாடகருக்கு, நேற்றும், இன்றும், நாளையும், என்றென்றும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கவே செய்வார்கள். ஒவ்வொரு உணர்வையும் செதுக்கிப் பாடும் அன்னார்க்கு வந்தனம்!

Malaysia Vasudevan
Kavignar Vairamuthu

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist for this song is Kavignar Vairamuthu. Director for this movie is SP. Muthuraman.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaa Vaa Vasanthame (வா வா வசந்தமே) from Puthu Kavthai (புதுக்கவிதை) (1983)