Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

தீபாவளி விடுமுறை; தி.நகர் நெரிசல் … இவற்றைதான் Twitterல் அதிகம் பார்க்கமுடிகிறது. எல்லாரும் மிகவும் busy. உங்கள் வீடுகளில் இந்தத் திருவிழாக்காலக் குதூகலம் வருடம்தோறும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.

நேற்று, Twitterல் நம் நண்பர்கள் திட்டித்தீர்த்துவிட்டார்கள். அட, அமெரிக்காவுக்கே ஆட்டோ அனுப்பி நம்மைக் கவனிக்கவும் ஏற்பாடெல்லாம் ஜோராக நடக்கிறது என்று நினைக்கும்போது ஒரே குஜாலாக இருந்தது. ஹஹஹா!

சரி. கிளர்ச்சி கிளம்பினால் அதைத் தணிப்பதுதானே நம்ம புதிரோட style? அதைதானே இவ்வளவு நாளும் செய்துகொண்டுவந்தோம்? அதனால், இன்று ஞாயிறு என்றாலும், out-of-sequenceல் இந்த எளிய புதிரை நுழைக்கிறேன். ஆட்டோவுக்குச் செலவெல்லாம் செய்யவேண்டாம். (அட, ஆட்டோவ விடுங்க பாஸு.. இங்கே எப்பவும் இல்லாமல், பூகம்பமே வந்துடுச்சு.. கவலை வேண்டாம், நம் கலெக்ஷனில் அனைத்து ஒலி நாடாக்களும் பத்திரமாகவே இருக்கிறது.. .நம் #365RajaQuiz தொடரும் 🙂)

இன்றைய பாடலில், percussionன் ஆளுமை மிக அதிகமாக இருக்கும். இதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், நான் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், இது ஒரு மெலடி பாடல். இந்த அளவுக்கு அலப்பறை எல்லாம் அடித்து தூள் கிளப்பும் அளவுக்கு இது ஒரு sensational songஏ அல்ல! மிக அருமையான மெலடி. ஆனால், அந்த மெலடியில், ஊர்ந்து வரும் மெல்லிய பல்லவியில் இருந்து சரணத்திற்குள் புகும் interludeகளில் ராஜா ஒரு percussion வெறியாட்டமே நடத்தி இருப்பார். அதைக் கவனித்தாலே இந்தப் பாடலின் அருமையை நன்கு appreciate செய்யலாம்.

இந்தப் பாடல் ஒரு முழு மெலடி பாடல் என்பதை, ஆரம்பத்தில் நுழைக்கப்பட்ட அதிரடி, அதிர்வேட்டு percussion மிக வேகமாக slow-down ஆகி ஒரு flute pieceக்குள் நுழைந்து நிறைவு பெறும் அந்த நொடிகளில் நன்கு உணரலாம்.

இந்த மெலடி பாடலின் interludeலும் ராஜா தனது மெலடி அஸ்திரமான வயலினை உபயோகிக்கவே இல்லை 🙂

இந்தப் படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். மேலும், எனக்கு இந்தப் படப் பாடல்கள்மீது ஒரு தனிப்பட்ட பாசமே உண்டு. இன்று நினைத்தாலும், இந்தப் பாடல்கள் என் நினைவுகளைத் தூண்டும். நாளை பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். (சரி, சரி! செவ்வாய்தான் தீபாவளி. தெரியும்… ஆனா, நிறைய பேர் இப்பவே சொல்ல ஆரம்பிச்சாச்சு… அதான் நாமும் சொல்லிடறோம். சரியா? 🙂 )

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Both the lead-singers of this song, come from distinguished singers’ families of Tamil Film Music, with one of them the direct heir of a lead TFM singer 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Deepangal Pesum (தீபங்கள் பேசும்) from Devathai (தேவதை) (1997)

Advertisements