Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். தீபாவளி பண்டிகை நேரம். என்ன, பலகாரம் எல்லாம் செஞ்சாச்சா? அதெல்லாம் இன்னும் செய்யறீங்கதானே? இல்லை, அதுவும் outsourcing பண்ண ஆரம்பிச்சாச்சா?🙂

நிறைய பேர் பயணம் செய்யுறாங்கபோல இருக்கு. அதனால, சுருக்கமாகவே, நேரா இன்றைய க்ளூவுக்குள் போகலாமா?

நேற்றைய க்ளூவை முதல்ல கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பார்த்துக்கலாமா? இதோ 104/365.

அதுவும் டூயட்தான். அதுவும் மெலடிதான். அதிலும் கிடார்தான் கிங். அதிலும் வயலின் உண்டு: ஆனால், ஆரம்பத்தில் பீத்தோவன் கூர் காது கொண்டு கேட்டால்மட்டுமே மெல்லிய backgroundல் கேட்கலாம்.

இன்றும் டூயட்தான். இதுவும் மெலடிதான். இதிலும் கிடார்தான் கிங். இதிலும் வயலின் உண்டு: ஆனால், நடுவில் அவிந்துபோன காது கொண்டு கேட்டாலும்கூட மிக அழகாகக் கேட்கலாம்.

இதில் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் காட்ட எண்ணியே we are having today’s clue, back-to-back with similar feel.

கேளுங்கள்:

ஆரம்பம் keyboardsலும், 4th secondல் மென்மையான Guitarsலும் ஆரம்பிக்கிறது. இதில் அந்த 10th secondஐக் கவனித்து கேட்டால், நேற்றைய பாடலில் backgroundல் ஆர்ப்பாட்டமே இல்லாமல் இசைத்த violins இங்கும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் தலையைக் காட்டுவதை காணலாம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், குற்றாலத்தில் ஜில் நீரில் நனைவதற்குமுன், Main Fallsல் சாரலை அனுபவித்து, பின்னர் முழுக்க நனையப் போவோமே, அதுமாதிரி, இங்கே சாரல்போன்ற துளிகளில் எட்டிப்பார்க்கும் violins, பின்னால் 26-second markerல் முழு வீச்சில் வரும். மிக அழகான interlude. அதுவும் அந்த 26-secondல் வரும் violin interlude, is actually a wonderful repeat of the same note that was played in the flute at the 18-second marker. இங்கே அந்த வேகம் எடுக்கும் violins முடிவில் interludeஐ முடித்துக் கொடுக்கும்போது, மனம் கேட்குமே, once more!.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Starting line of this song is the same as a movie-name with 3 words. One of the singers is K.S. Chitra. 3 starting words of song is a film title MDd by Raaja as well. There is another song of Raaja, with the same 3 starting words of this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thendral varum theru (தென்றல் வரும் தெரு) from Sirayil Sila Raagangal (சிறையில் சில ராகங்கள் ) (1990)