Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேற்றைய பாடலுக்கான பின்னூட்டங்களைக் கண்டிப்பாகப் படித்துவிடுங்கள் :). அவ்வளவு அருமையான கருத்துகளை நமது நண்பர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். எவ்வளவோ மலையாளப் பாடல்களை கேட்டிருக்கும் எனக்கு, இந்தப் பாடலின் மூலத்தைக் கேள்விப்படாமல் இருந்த வியப்பை நண்பர்களின் திறமையான பின்னூட்டங்கள் தெளிவுபடுத்தி மகிழ்ச்சியூட்டின. அதுவும் நமது @RagavanGயின் நீண்ட விளக்கவுரையாகட்டும், இது தான் Trampoline என்று எடுத்தியம்பிய @ThachiMammuவாக இருக்கட்டும், என்ன என்ன ராகங்கள் என்று cross-references போட்டு அழகாகக் காட்டும் @prasannaR_ ஆக இருக்கட்டும், இங்கு வருகை தரும் பிற மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரும் நுகரும் வகையில் ஆங்கிலத்தில் விவரிக்கும் @MaestroWorldஆக இருக்கட்டும், துப்பறியும் சாம்பு என்று நான் அடிக்கடி ஓட்டும் @rajabalanmன் புதிரின் விடையை கண்டுபிடிப்பது எப்படி என்கிற ரீதியில் சூசகமாக விவரிக்கும் அவரின் விறுவிறு நடையாக இருக்கட்டும், ஒவ்வொன்றும் நம்மை கைப்பிடித்து இழுத்துச்சென்று விவரிக்கும் அழகே தனி. மிக்க நன்றி நண்பர்களே. வேறு எவரையாவது விட்டிருந்தால் மன்னிக்கவும். அடுத்தமுறை இழுத்துவிடுகிறேன் 🙂

இன்றைய பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். என்ன படம், யார் நடித்தார்கள் என்று ஒரு விவரமும் தெரியாது. ஆம். கோயம்புத்தூர் அகில இந்திய வானொலி நிலையத்தில் அடிக்கடி கேட்டு வளர்ந்த பாடல். இந்தப் பாடலின் ஆரம்ப interludeக்கு நான் அடிமை. அவ்வளவு மென்மையாக Guitar preludesஉடன் ஆரம்பிக்கும். வசந்த கால நினைவுகள் பூப்பதுபோல, guitars and flutesஉடன் ஆரம்பிக்கும். அந்த feel அப்படியே இந்த புதிரின் interludeல் இருக்கும்.

கேளுங்கள்.

புதிரின் இசையில் ஆரம்பமாவது, Violinல் கரைந்த Guitars. SCல் நான் markers போட்டிருக்கிறேன். கிட்டதட்ட 15 நொடிகளுக்கு வெறும் guitarsதான். இந்த அளவுக்கு அது நீண்டுகொண்டே வரும் நூதனத்தைக் கவனிப்பதற்குள், ஒரு sudden turn எடுக்கும் அந்த இடம்…. அந்த இடம்(16-second marker)தான் என்னுடைய favorite. ஏன் என்றால், மிக அழகாக flutes நுழைந்துச் செய்யும் மெல்லிய சேட்டையே தனி. இங்கே நீங்கள் அனுபவித்து ரசிக்கக்கூடிய இந்த இடத்தில், parallelஆக இசைஞானி flutesஐப் போட்டிருப்பார். ஒரு flute அல்ல; வெவ்வேறு flutes. இதில் மற்றோர் அழகு என்னவென்றால், இந்த இடத்தில் அந்த flutes வரும்போது, அதோடு சேர்ந்து வரும் guitar strummingஐயும் பாருங்கள்… இவை எல்லாம் வர வர, கூடவே light percussion drums வேறு துணைக்கு வருகிறது.

என்ன சொல்றதுன்னே தெரியலை. அம்சமான மெலடிக்கு நன்றி, வந்தனம். வாழிய, வாழிய, ராஜா!

நிற்க.

மெலடி பாடலில்,மெலடி கருவியான violinsஐ வேண்டுமென்றே backgroundல்மட்டும் இசைத்துவிட்டு, foregroundல் அது சுத்தமாக வராதவண்ணம்…. ச்ச …Ilaiyaaraaja is epitome of ingenuity. Salute, Raaja!

இந்தக் கேள்விக்கு பதில் நமக்கு வேண்டாம். இந்த interludeஐயே continuous-playஆகக் கேட்டுக்கொண்டே இருப்பது தான் ஒரே விடை 🙂

Have a nice weekend!

பி.கு.: ஒலியை Goldwaveல் encode செய்யவேண்டியதாயிற்று… guitar ஒலியைத் துல்லியமாகக் கேட்க ஏதுவாக. நன்றி.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Title of this movie comprises TWO words and have direct relationship with Mathematical numerals 🙂 One of the singers is Mano 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sangeetha Poomazhaye (சங்கீத பூமழையே) from Irandil Ondru (இரண்டில் ஒன்று ) (1988)

Advertisements