Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம். நிறைய பேர் இந்த இரண்டாவது சீசனில் பங்குகொண்டு விடையளிப்பது மிக்க மகிழ்ச்சி. நேற்று Twitterல் நண்பருடன் நடந்த ஒரு சிறு உரையாடலைப் பாருங்களேன்:

அவர் சொல்வது உண்மை. புதிராக உதயமாகும் ஒவ்வொரு பதிவும் உங்களுடைய பின்னூட்டங்களால்தான் நிறைவுபெறுகிறது. அப்படி இருப்பதையே நானும் விரும்புகிறேன்.

முதன்முதலில், @RagavanG(ஜிரா)மட்டும்தான் விலாவரியாக விமர்சனம் எழுதுவார். பின்னர், அவரை முன்வைத்து சில நண்பர்களிடம், எழுதுங்களேன் என்று சொன்னதுதான் மிச்சம். உடனே எழுதித் தள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் பலருக்கு நீங்கள் விசிறிகள் என்றும் எனக்குத் தெரியும். அதையே மேலே @mayilSK சூசகமாகக் காட்டியிருக்கிறார்.

வெறும் புதிர், பதில் என்று இல்லாமல், இதை ஏன் ஓர் எழுத்துப் பயிற்சியாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது? தினமும் 2 அல்லது 3 வாக்கியங்களாவது குறைந்தபட்சம் எழுதுங்களேன். @PrasannaR_, @ThachiMammu, @MaestroWorld, @RajaBalanm etc. என்று ஆரம்பிக்கலாமே. இவர்கள் எல்லாம் எழுத ஆரம்பித்தவுடன் நம் புதிர் மேலும் களை கட்ட ஆரம்பித்துவிட்டது. ஜிராவைப் பார்த்து இவர்களும், இவர்களைப் பார்த்து இப்போது மெதுவாக மற்றவர்களும் இறங்கியிருப்பது, நிறைய பேரைக் கவனிக்கவைத்திருக்கிறது. This is the wonderful experience of how positive feeds on more positive and gradually a momentum picks-up. Just imagine, how, somebody who stops by this site in future would see these comments and derive more pleasure and information out of them 🙂

இன்றைய பாடலைப் பாடிய ஆண் பாடகருக்கும் சரி, பெண் பாடகருக்கும் சரி, இங்கே நமது #365RajaQuizல் நிறைய விசிறிகள் உண்டு. சில பாடல்களின் interludesஐ எத்துணை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். இன்றைய இசை அவ்வண்ணமே. கேளுங்கள்.

ஒரு சலீல் ஒலியோடு மெலிதான தாளம் வருகிறதே, அது பாடலின் ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை ஒரே சீராக வந்துகொண்டே இருக்கும். புதிரின் ஆரம்பமோ keyboardsஇல் ஆரம்பிக்கும்.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே வரும் இசையை நல்ல தரமான headsets or speakersஇல் கேளுங்கள்

ஏன் என்றால், அந்த keyboard ஒலியின் பின்னணியிலேயே பயணம் செய்யும் இசையில் மெல்லிய தாளங்களை மிக அழகாகக் கோத்துவிட்டிருப்பார் ராஜா. கேளுங்கள். உங்களுக்கே புரியும் 🙂 From 5-second to 18-second marker you can enjoy the டோண்டக்கும் கொடண்டக்கும் sound. 🙂

அதே போல அந்த 19-second markerஐ கவனியுங்கள். அங்கே வரும் guitar இசையை என்னவென்று சொல்வது. அவ்வளவு அழகாக strum செய்யப்பட்டிருக்கும் guitar, புதினா துவையல்போல!

இந்த interlude எனக்கு மிகவும் பிடிக்கப் பல காரணங்கள். அதில் மிக முக்கியமானது, இந்த 19-second markerல் இருந்து வரும் சங்கதிதான்.

A humble request will be to keep replaying this clue and also noticing the markers, I have added to SoundCloud for this clue.

அந்த 19-second markerல் ஒரு note முதலில் fluteல் வருகிறது. This note is played fully from 20-second to 25-second marker in flute. But what you will see almost immediately in 26-marker is that this note is played exactly, but, with violins. Brilliant twist, juxtaposed to each other. அட, அதோடு முடிந்தது என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இல்லை 🙂 அந்த 30-second markerல் அதே இசை tuneஐ, ராஜா, guitarக்குள் கொண்டுபோய், flutesஉடன் இணைத்து, பின்னர் வயலின் ஊறுகாயில் நனைத்து, தச்சி மம்மு ஊட்டிப் பாடலின் interludeஐ முடித்துவிடுகிறார்!

இந்த க்ளூவைமட்டும் ஒரே ஒருமுறை play செய்யப்போறவங்க யாருமே இருக்கமாட்டீங்க. No problem. Play it as many times as you want as this is one of the best melodious interludes. இது மெலடி அல்ல, மகுடி. பாம்புமாதிரி மயங்கி இருக்கவேண்டியதுதான்.

என்ன? கண்டுபிடித்துவிடலாம் தானே?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Despite such a soothing, soft, duet song, the title of this movie will be just the opposite as it sounds like a stern warning (in a menacing way). 🙂 This actor even got an anticipatory-bail from Madras High Court within the past two weeks, after being charged with reckless conduct at the Madras Airport.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sariyo Sariyo (சரியோ சரியோ ) from Enkitta Mothadhe(எங்கிட்ட மோதாதே ) (1989)

Advertisements