Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய புதிரை சுற்றி Twitterஇலும் இங்கே பின்னூட்டத்திலும் வந்த responseஐ பார்த்து மிக்க மகிழ்ச்சி. எந்த அளவுக்கு அந்த பாடல் சிலரை தொட்டு இருக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை, நண்பர் @rozavasanthன் பதிவை பார்த்தாலே, நீங்கள் புரிந்தும் அறிந்தும் கொள்ளலாம். என்ன அருமையான பதிவு! இம்மாதிரி நிறைய பாடல்கள், அவரவர் வாழ்க்கையில் நீங்காத நினைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம். தயக்கம் இல்லாமல் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.

100க்குள் அடி எடுத்து வைக்கப்போகிறோம். அதனால் ஒரு curtain-raiser மாதிரி, அடிதடி ரணகளம் என்பது போல இல்லாமல், gentleஆகவும், ஆனால் அதே சமயம், stylishஆகவும் அடியெடுத்து வைக்கும் விதத்தில் ஒரு பாடல் வேண்டும் என்று நினைத்த உடனேயே தோன்றியது இந்த பாடல் தான். கவனியுங்களேன்…

Enjoy this curtain-raiser with good headphones/speakers in stereophonic sound. (NB: encoded audio file)

Multiple tracksல், வேகமாக Flutesஉடன் ஆரம்பமாகிறது.அதே வேகத்துக்கு இணையாக group-violinsஉம் ஒன்று சேர, அங்கேயே நம் ஆவல் தூண்டப்படுகிறது. நடுவே, Piano interludes மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வந்திருப்பது கொள்ளை அழகு. இல்லையா? ஆனால் அந்த 15-marker positionல் தான் எனக்கு மிகவும் பிடித்த இசை சங்கதி வருகிறது. அந்த இடத்தில் பாருங்கள், அருமையான ஒரு Waterfall போல, group-violins, flutesஉடன் சேர்ந்து ஒரு symphonyயையே நடத்த ஆரம்பிக்கிறது. அந்த main notesயிலேயே, parallel tracksஆக வெவ்வேறு violins சீறி பாய்ந்து கொண்டிருக்க, அங்கே flutesஉம் தனியாக ஒரு trackல் பயணிக்க, அருமையானதொரு இசை அரங்கேறி முடிகிறது.

இது ஒரு டூயட் என்றால் நம்ப முடிகிறதா?

அல்லது, பாடலின் ஆரம்பமே அதிரடியாக percussionல் ஆரம்பித்து ஒரு chorus hummingல் தொடங்கும் என்றால் நம்ப முடிகிறதா?

அல்லது, இது SP பாலசுப்பிரமணியன் ஜாலியாக விளாசின பாடல் என்றால் நம்ப முடிகிறதா?

இந்த இசையை புதிரில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது, முன்பு ஒரு நாள், உறைபனியில் என் காரை கிளப்பும்போது நடந்த ஒரு எதேச்சையான நிகழ்வின் போது தான். உறைபனியால் என் காரின் கண்ணாடி எல்லாம் மூடப்பட்டிருக்கவே, heaterஐ ON செய்துவிட்டு, என் CD-playerஐ ON செய்ய, மிகச்சரியாக இந்த புதிரின் இசை தான் வந்தது. திடீர் என்று எனக்குள் அப்படி ஒரு ஆனந்தம். அட….இது என்ன ஒரு மாயமான மேற்கத்திய சிம்பொனி அழகில் உள்ள இசை என்று நினைத்து வியந்தேன். அது வரையில் அந்த இசையை அறிந்து இருந்தாலும், காரில் வேறு வழி இல்லாமல் சிக்கி சூடு ஏற்றிக்கொண்டிருந்த அந்த சொற்ப நொடிகளின் அனுபவம், இந்த பாடலின் மீது எனக்கு இருந்த பிரியத்தை பன்மடங்கு ஆக்கியது. இப்படி ஒவ்வொரு பாடலையும் அனுபவித்து உணர்ந்தாலே போதும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்! An Archimedes moment, I guess. 🙂

This is the perfect curtain-raiser, for tomorrow’s 100/365. This milestone is impossible without you all. Thanks everybody. Meet you tomorrow on our century clue 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This was a remake of an English movie that had the most gossiped, lead-pair of 1990s Tamil Cinema. One of them is a celebrity Tweeter 🙂

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ila Vattam (இள வட்டம் ) from My Dear Maarthaandan (மை டியர் மார்த்தாண்டன்) (1990)

Advertisements