Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். 95/365க்கு இருந்த வரவேற்பைப் பார்த்துக் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். எத்தனை பேர் அந்தப் பாடலைச் சிலாகித்து Twitterரிலும் இங்கே பின்னூட்டத்திலும் உங்கள் கருத்துகளை ஆழமாகப் பதித்திருந்தீர்கள்! அடேங்கப்பா!

அதன் தொடர்ச்சியாக, அதே நேர்த்தியான சங்கதிகளைக் கொண்ட இன்னொரு பாடலின் interludeஐ இன்றைய புதிருக்குள் கொண்டுவந்திருக்கிறேன்.

இன்று நவம்பர் ஒன்று. புதியதொரு மாதம், புத்துணர்வை அளிக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வந்துள்ள நண்பர் சரண்கேக்கு இது வரவேற்பு entry என்றும் சொல்லலாம். ஒருவகையில் இந்தப் பாடலைக் குறித்து நானும் அவரும் எதேச்சையாக Twitterரில் கருத்துகள் பரிமாற, அப்போதுதான் அவரும் ஒரு பெரிய ராஜா ரசிகர் என்றே எனக்குத் தெரியவந்தது.

Besides the musical interludes, Saranams of this song are one of the best! 🙂

இந்த interludeஐக் கவனியுங்களேன். This song rocks with synth and extreme guitars, just like yesterday’s 🙂 நேற்றுமாதிரியே இதிலும் வரும் Sax, Guitar, and percussion அமைப்பைப் பாருங்களேன். அந்த solo Saxன் களி ஏற்படுத்தும் இசைக்கு, அந்த மெல்லிய beatsஉடன் வரும் percussionஐக் கவனியுங்கள். இந்தக் பாடலைக் கண்டுபிடிக்க அது ஒரு சரியான clue. ஏனென்றால், பாடல் முழுவதுமாக அந்த மெல்லிய beats கலந்த percussion வந்துகொண்டே இருக்கும். இந்தப் பெண்கள் chorus சுவைக்கு மேலும் சுவை சேர்க்க, அவர்களுக்கு ஈடு கொடுக்கும் ஒரு male voiceஆகவே அந்த ரோமாஞ்சனம் கலந்த Sax வந்துவிடுகிறது.

இந்த Sax எப்படி ஒரு கிண்டல் கலந்த கொஞ்சலோடு வருதுன்னு பாருங்க… செம… ;))

அதோடுமட்டுமல்லாமல், அந்த Guitarஸ் எப்படி? நேற்றுமாதிரியே அதை strum செய்திருக்கும் அழகு, நம் மூளையிலுள்ள அனைத்து neuronகளையும் உசுப்பிவிடும் அளவுக்குக் கிக்கோ கிக்தான். என்ன ஓர் அழகு பாருங்கள். இந்தப் பாட்டும் ஒரு மயக்கம் தரும் பாடல். இதை ஒருமுறை கேட்டால், கண்டிப்பாக அடுத்த பாடலுக்குப் போகமுடியாத அளவுக்கு addictiveஆக உள்ள காரணத்தினால்தானோ என்னவோ, இதே பாடலை இசைஞானி வேறு ஒரு படத்துக்கும் உபயோகித்தார்.

இந்த interludeன் நிறைவாக, String finaleவாக Guitarஉடன் வீணையையும் இசைஞானி குறும்பாகச் சேர்த்துவிட்டமாதிரி எனக்குக் கேட்கிறது. For you? Is it just guitar or guitar + veena?

இந்த அருமையான பாடலைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், lifeline clueவைப் பாருங்கள். அதில் தெரியும் 🙂

இதுபோன்ற பாடல்களையெல்லாம் 1980களில் சும்மா சர்வசாதாரணமாக Javed Miandad கடைசி பந்தில் Sharjahவில் Sixer அடித்தமாதிரி பொளந்துகட்டி அடித்துவிட்டு, ஒன்றுமே நடக்காததுபோல இருந்தார் ராஜா. One of the golden-era of Tamil Film Music, I must say. What a song and what a composition!

கண்டுபிடியுங்கள். வாழ்த்துகள்.

Audio-qualify of this song in Tamil is horrible on the Net. So, enjoy its Hindi remake, courtesy of @SharanKay.

#365RajaQuiz sincerely thanks @SharanKay for popularizing this song on Twitter, unlike few of us who had the opportunity to watch it on Doordarshan few decades ago 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Maestro had scored same song in Hindi as female solo with Asha Bhosle, while this was a duet in Tamil by Vani Jayaram with another male lead singer.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Vaadagai Veedithu (வாடகை வீடிது) from Paadaatha Thenikkal (பாடாத தேனீக்கள்) (1988)

Advertisements