Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இங்கே Sandy; அங்கே Nilam. இசையாலும் உணர்வாலும்தான் ஒன்றுபட்டோம் என்றால் புயலிலுமா? அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்.

அக்டோபர் மாதம் முடிய இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கிறது. அக்டோபர் மாதம் பொதுவாக National Bullying Prevention Monthஆக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் bullying ஒரு மாபெரும் பிரச்னையாகப் பெருகிவருவதில் வருத்தமே. குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் இந்தச் சமூக நோயை வேரோடு அறுக்க நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும். இணையம் மூலமாகப் பெருகிவரும் இவ்வகைக் குற்றங்கள், Amanda Todd போன்ற பிஞ்சுகளை இரக்கமின்றிக் கொய்துசென்றது அநியாயம். அதுவும் இந்த மாதத்தில் நடந்தது பயங்கர irony. RIP, Amanda. உங்கள் குழந்தை அருகில் இருந்தால், கட்டிப்பிடித்து முத்தம் கொடுங்கள். You will never know what a difference that will make!

Amanda Todd

சிறுவயதினரைமட்டும் bullying தாக்குவதில்லை. பிற்காலத்தில் abuse, blackmail, vexatious litigation என்று bullying பல பரிணாமங்களில் வரும் அபாயம் உள்ளதால், குழந்தைகளை வளர்க்கும்போதே அவர்களுக்கு ஊட்ட வேண்டிய அளவுக்கு self-esteem ஊட்டி வளர்க்கிறோமா என்று யோசிக்கவேண்டும்.

நிற்க.

என்ன இது பிரசங்கம்? அதானே? கருத்து சொல்லவரலைங்க 🙂 இந்தப் பாட்டுக்கும், இந்தக் கருத்துக்கும் நிறைய பொருத்தம் உண்டு. கருத்து சொல்லவரும்போது காமெடி கலந்து சொல்லும்போது, அதுக்கு இருக்கும் reachஏ தனி. இந்தப் படமும் அந்தமாதிரி ஒரு experiment. மிக நன்றாக ஓடிய படம். Bullying என்று நேரடியாகச் சொல்லமுடியாது, இது வேறுவிதம்.

Interludeஐக் கவனியுங்கள்….

Saxophone மற்றும் மெல்லிய மணி ஒலியோடு ஆரம்பமாகும் இசை, ஒருவித வலியின் வேதனையை, எதிரே இருப்பவர் உணரும்வகையில் வருகிறது. இம்மாதிரியான abuse எல்லாம் தவறில்லையா என்று ஒருவித ஏக்கத்தோடு கேட்பதுபோன்று இசையின் நடை இருப்பது, படத்தின் மையக் கருத்தை நன்றாகப் பிரதிபலிக்கும்வண்ணம் இருக்கும். ஒரு நிமிடம், அந்த “டிங்…டிங்” மணியைமட்டுமே focus செய்யுங்களேன். ஒரே சீரான இடைவெளியில் அந்த மணிமட்டும் மாறாமல் ஒலிப்பதை கேட்டீர்களா? முடிவில் அதிரும் percussion வரும்போதுகூட பாருங்கள், அந்த மணியின் ஒலியானது தங்குதடையின்றி வருவது எனக்கு இந்த sequenceன் Zen momentஆக தோன்றும். எவ்வளவு இன்னல், கொடுமை, ஏமாற்றம் என்று நம்மை நிலைகுலையவைக்கும் சங்கதிகள் பல நடந்தாலும், நம் internal resilience ஒரு தீப ஒளியாகவும், இந்த மணியின் நுண்ணிய ஒலியாகவும் ஒளியும், ஒலியும் நமது கையில் தான் இருக்கிறது. சில activistsஐ பார்த்திருக்கிறேன். அடிப்படையில் நல்லெண்ணத்தால் உந்தப்பட்டாலும், அந்த “மணி” போன்ற balance இல்லாமல் நிலை தவறி, எதற்காக போராடுகிறோம் என்பதைக்கூட மறந்துபோய் தடம் மாறிவிடுகிறார்கள். That balance — that resilience — that is the key. That is the message I get, in this particular sequence. அதுவும் அந்த 13-second markerல் வரும் violins இருக்கிறதே, அடடா… என்ன ஒரு serenity!

ஆக, உணர்வுகளை அடக்கியும், அவற்றைப் பண்படுத்தி ஒருமுகப்படுத்தும்விதமாகவும் அமைந்துள்ள இந்தப் பாடலைக் கண்டுபிடிக்கலாம்தானே?

ஹும் ஆரம்பியுங்கள். பின்னூட்டமாக இடுங்கள். இனிய நாளாக இன்றும் என்றும் அமையட்டும்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

With a male protagonist, this movie had more than two heroines.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Magalir Mattum (மகளிர் மட்டும்) from Magalir Mattum (மகளிர் மட்டும்) (1994)

Advertisements