Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம். நேற்றைய பாடலுக்கு இருந்த வரவேற்பை கண்டு உவகை அடைந்தேன். நான் முன்பே கூறியது போல, இந்த பாடலை தான் கேட்பேன் என்று யாருமே யூகிக்க முடியாத வண்ணம் அருமையாக இருந்தது என்று வெகுவாக பாராட்டப்பட்டதில் பெருமகிழ்ச்சி. அருமை நண்பர் @thachimammuவின் குடும்பமே இந்த 92/365ஐ ஒன்றாக solve செய்தார்கள் என்பதை எல்லாம் அறியும் போது, வெறும் கணினி –> கணினி connection மட்டும் அல்ல, இதயம் –> இதயம் connection இருப்பதை அல்லவா காட்டுகிறது? மிக்க மகிழ்ச்சி. தயவு செய்து நேற்றைய பின்னூட்டங்களை படித்துப் பாருங்கள். @vrsaran நேற்றைய பாடலை “couple’s song” என்றே declare செய்துவிட்டார்.

Hurricane Sandy

இங்கே வட அமெரிக்காவில் புயல் — சாண்டி. எல்லாரும் பாதுகாப்பாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அதே போல, ஒரு வாரமாக வேறு விதமான புயல் வீசும் இவ்வேளையில், விடுமுறை கழித்து இன்று அமர்வுக்கு வரும் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன் நீதிக்காக போராடும் உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை கூறும் வண்ணம் ஒரு இன்னிசை மெலடியை புதிராக தருகிறேன்.

இது சந்தூர், வயலின் மற்றும் தபேலாவில் கொடி கட்டிய மெலடி பாடல். நிறைய உள்ளங்களை குளிர்விக்க இந்த சாரல் மழை. புயலுக்கு நடுவேயும், ஒரு வித இதமான மழைத்தூறலை ரசிக்கும் வண்ணம் இருக்கட்டுமே என்று. இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்க ஒரு காரணம் என்னவென்றால், அது செல்லும் பாங்கு. ஒரு சிறு அலை அடித்துக்கொண்டே போவது போல ஒரு அழகை இந்த பாடல் முழுதும் காணலாம்.

இது மிகவும் எளிதான புதிர் என்றே நினைக்கிறேன். பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

பசுநேசன் என்று அனைவராலும் பாசத்தால் அழைக்கப்பட்ட நடிகர் நடித்தப் படம் இது.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Arumbagi Mottaagi (அரும்பாகி மொட்டாகி) from Enga Ooru Kaavakkaran (எங்க ஊரு காவக்காரன் ) (1987)