Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம். நேற்று மிக சுலபமாக இருந்தது என்று எல்லாரும் ரசித்ததை நான் நன்கு ரசித்தேன். எப்போதும் போல அருமையான பின்னூட்டங்களும், கீச்சுகளும் வந்து கொண்டிருந்தது. அருமையான அந்த குழந்தைப்பாடலை சிலாகித்து எழுதிய உங்கள் அனைவருக்கும் எனனுடைய நன்றிகள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது.

இன்றைய பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதற்கு பல காரணங்கள் உண்டு. அவை musical காரணங்களை கடந்து நிற்பது🙂 இந்த படம், நான் சிறுவனாக இருந்த போது வந்த படம். சென்னைவாசிகள் எப்போதும் கொடுத்து வைத்தவர்கள். அந்த காலத்து சினிமா shooting சர்வ சாதாரணமாக சென்னையில் பார்த்திருப்பார்கள். ஆனால் என்னுடைய ஊரான கோயம்புத்தூரில் அதெல்லாம் இல்லை. அத்தி பூத்தாற்போல ஏதாவது சினிமா ஷூட்டிங் வந்தால் தான் உண்டு.

இந்த படம் வந்தது.

இன்னொரு விசேஷம் என்னவென்றால், coincidenceஆ அல்லது அதற்கும் மேலா என்று தெரியவில்லை. ஆனால், என்னை எப்படியும் இந்த Ilaiyaraaja Quiz நிகழ்ச்சிகள் உள் இழுத்து விடும். இந்த பாடலை, இந்த interludeஐ தான் நான் முதன்முதலில் ஒரு inter-school competitionல் Quizmasterஆக வைத்தேன். நல்ல வரவேற்பு இருந்தது. இது நடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன🙂

இன்று #365RajaQuiz லையும் அதே சவாரி தான். என்ன விந்தையான உலகம்🙂

இந்த புதிருக்கு வருவோம். என்ன அருமையான ஒரு Fall Weatherக்கு ஏற்ற feel. ஆரம்ப guitar எப்படி இருக்கிறது பாருங்கள். அத்தோடு வரும் violins பின்னர் வரும் flute என்று போனாலும், அந்த நடுவில் ஒரு pause கொடுத்து ஒரு slow-motion group violins வருவது போல அவர் இசை அமைத்திருப்பது தான் அந்த காலம் முதல் இந்த காலம் வரை என்னை கட்டி போட்டிருப்பது.

நேற்று போல இன்றும் சுலபம் தான். கண்டுபிடியுங்களேன். வாழ்த்துக்கள்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Kavignar Kannadasan wrote this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ramanin Mohanam (ராமனின் மோகனம் ) from Netrikkan(நெற்றிக்கண் ) (1981)