Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்று ஊரடங்கும் சாமத்திலே, நானுறங்கும் நேரத்துலேன்னு, சாமத்துல லைட்டையும், நீச்சல் குளத்துல டென்னிஸ் டிரெஸ்ஸை போட்டுகிட்டுச் சிலர் உறங்காமல் கிறங்கியதைப் பார்த்தோம். அதில் இருந்து இன்னும் முன்னேறி, சமீப காலத்துப் பாட்டு ஒன்றைப் பார்ப்போம். இதுவும் உங்களை மயங்கவைக்கப்போகும் பாட்டுதான்.

ஏன்னா, இசைஞானி இளையராஜா உருகி உருகிப் பாடியிருக்கும் செம பாட்டு இது!

ஆரம்பத்துல எவ்வளவு அழகான guitar interlude வருது பாருங்க. பதிவு செய்யும்போது, இந்தப் புதிரின் waveform, அழகா, அவ்வளவு uniformஆ இருந்துச்சு. அதுலேயே தெரிஞ்சுடும் இது எவ்வளவு சாந்தமான மெலடி interludeனு. இந்தக் காலத்தில் இசைஞானி இசையமைத்த பாடல்களை அவர் ரசிகர்கள் நன்கு தேடிக் கண்டுபிடித்துக் கேட்டார்களே தவிர, வெளியில் அவ்வளவு visibility இல்லாமல் போனது வருந்தத்தக்கது.

There is a common thread between 79/365 and 80/365. Go figure 🙂

எங்க ஊர்க்காரர் ஒருத்தருக்காக உருகி, உருகி, இழைச்சு இழைச்சு இந்தப் படத்துக்குப் பாடல்களைக் கொடுத்தார் இசைஞானி. இந்தப் பாட்டை கண்டுபிடிக்க முடிந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஒருவேளை இந்தப் பாடலை இது வரையில் கேட்டிராமல், இந்தப் புதிரின் மூலம் கேட்டீர்களானால், கண்டிப்பாக இந்தப் பாடலுக்கு அடிமை ஆகிவிடுவீர்கள். அந்த அளவுக்கு ஓர் அருமையான feel … காதல் feel … with an amazing “take-it-easy” demeanor இசைஞானி இளையராஜா will sing. Actually the other version would have been sung by another great singer, but, truth be told, that pales before this version of Maestro Ilaiyaraaja. இதை அனுபவிக்கவாவது கண்டுபிடிச்சுடுங்களேன் please.

எல்லாப் பாட்டுகளும் சூப்பர், இந்தப் படத்தில். Serious. ஆனா படம் வந்துச்சான்னு சந்தேகமாவே இருக்கு. அப்போது நான் இங்கே அமெரிக்காவில் இருந்ததால் என்னால் சரியாகச் சொல்லமுடியவில்லை. படம் பெட்டியிலேயே தங்கிவிட்டது என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. யாராவது சொன்னீங்கனா ரொம்ப சந்தோஷப்படுவேன்.

இந்த ஆல்பத்தை எனக்குப் பல வருடங்களுக்குமுன் அறிமுகப்படுத்தியது என் ஆருயிர் நண்பர்கள், வாஷிங்டன் DCயைச் சேர்ந்த அந்தப் புண்ணியவான், புண்ணியவதியின் இணையற்ற contributionதான், இன்று @kameshratnam கையில் தவழும் முகம் BGM.

இசைஞானி இளையராஜாவின் இசை எனக்குக் கொடுத்தது பல; அதில் அசைக்கமுடியாத நட்புகள் சிலவற்றையும் அள்ளிக்கொடுத்ததை இம்மாதிரியான பாடல்கள் நினைவுபடுத்தாத நாளே இல்லை.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This was the 2nd movie for this actor from Coimbatore, who won critical acclaim in the recent movie of Director Shankar.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oor Urangum Nerathil (ஊர் உறங்கும் நேரத்தில்) from Kanna Unnai Thedugiren (கண்ணா உன்னை தேடுகிறேன்) (2000)

Advertisements