Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

இன்றைய பாடல், மிக மிக இனிமையான ஒரு டூயட் பாடல். சிறு வயதில் அகில இந்திய வானொலி நிலையத்தில் கேட்டதைத்தவிர, இந்நாள்வரை இந்தப் பாடலையோ படத்தையோ ஒரு தடவைகூட பார்த்ததில்லை. யார் நடித்தார்கள் என்ற விவரமும் எனக்குத் தெரியாது.

90களின் பிற்பகுதியில் என்னுடைய ஆஸ்தான கடை கோவை ராயல் எலக்ட்ரானிக்ஸ்ல் போய், இந்தப் பாடலை ஹம் செய்து காட்டி (அப்பல்லாம் கூகிள் இல்லையே), அந்தக் கடையில் உள்ளவர்களை எல்லாம் வாட்டுவாட்டு என்று வாட்டி, “அட ரெக்ஸ் இந்தப் பாட்டைதான் பாடிக் காட்டுறார்”னு அவங்க என்னை தமாஷ் பண்ணி, அந்தப் படப் பாடல்களைப் பதிவு செய்து கொடுத்ததை மறக்க முடியாது. இப்படிப் பல படங்களின் பாடல்களைப் பாடிக் காட்டியே பதிவு செய்து வைத்ததெல்லாம் இன்று நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. அப்படிப் பதிவு செய்து வந்த ஒலி நாடாக்கள் இன்னும் என்னுடன் இருப்பதைப் பார்க்கும்போது nostalgia கூடவே வந்து ஒட்டிக்கொள்கிறது.

என் மகள் பிறந்தபோது டாக்டர்கள் என் கையில் முதன்முதலாக அவளைக் கொடுத்தபோது நான் எப்படிச் சந்தோஷப்பட்டேனோ, அதேமாதிரிதான் பதிவு செய்யப்பட்ட cassetteஐ வாங்கும்போதும் அந்தக் காலத்தில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி பரவசம் ஒவ்வொரு முறையும் ஏற்படும். வீடு வந்து அதை Play செய்யும்போது ஒரு நிம்மதி வரும்! (அந்த காலத்தில் கோவையில் 16, 18 மணி நேர மின்வெட்டெல்லாம் இல்லை 🙂)
இளையராஜா

இணையத்தில் இந்தப் பாடல் இருக்கிறது. ஒலியின் தரம்தான் தர்ம சங்கடம் 😦 என்ன, நல்லா தேடிப் பார்க்கணும் 🙂 ஆனா, இருக்கு. எல்லாத் தளங்களிலும் இருக்கிறது.

முத்தான பாடல்ங்க. நீங்க இந்த interludeஐக் கேட்கும்போதே உங்கள் மனது லயித்துவிடும். SoundCloudல் நான் தந்திருக்கும் markersஐப் பாருங்கள்:

  1. 0-10 second marker: கணீரென்று சந்தூர் ஆரம்பிக்கிறது, மெலிதான drums பின்னணியில்.
  2. 10-15 second marker: இதில் மென்மையான வயலின் நுழைகிறது.
  3. 15-26 second marker : இதில் செம்புலப் பெயனீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே, என்கிற rangeல் என்ன அசால்டாக சந்தூரும் வயலினும் ஒன்று சேர்ந்து பயணம் செய்கிறது. ஆஹா, அருமை!
  4. 27-47 second marker: இந்த இடம்தாங்க இந்தப் பாட்டிலேயே படு special. சொல்லவே முடியாத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ஆற்றல் படைத்த இடம் இது. காரணம், வயலின் + சந்தூருடன் இணையும் Flute!

    ஏங்க, இந்தமாதிரி ஒவ்வொரு இடத்துலயும் பல நதிகள் வந்து ஒன்று சேர்வதுபோல organicஆ இசை அமைச்சா, எப்படிங்க இதை எல்லாம் நாம உணர்ச்சிவசப்படாம கேட்கமுடியும்? சொல்லுங்க.

    That seriousness, that melody, that trifecta of perfect instrumental blend! Raaja literally levitates me, every time I hear this song, especially at this point.

  5. 47-second till the end marker: The good thing about Raaja’s music is, he takes you up for a ride and lands you gently where you should be 🙂 அந்தமாதிரி ஒரு சுகமான முடிவாக முத்தாய்ப்புடன் வரும் இந்த சந்தூர் இசை, என்ன ஒரு மணி மகுடம்!

சின்ன வயசுல இருந்தே, இந்தப் பாட்டுக்குப் பைத்தியம் நான். ஆனா, இந்தப் படம், கதை, ஒண்ணுமே தெரியலைங்க. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொன்னா, ஒத்தாசையா இருக்கும். ஒரு மெலடி டூயட்டுக்குத் தலைவர் என் இந்த அளவுக்கு மெனக்கெட்டு இசை அமைத்திருக்கிறார்? ஏன் இவ்வளவு உணர்ச்சிகளை இந்தப் பாட்டில் அடுக்கி இருக்கார்ன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு. எனக்குப் பிடித்த பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆனால் யார் பாடலை எழுதியது என்று தெரியவில்லை.

Anyway, Brilliant team work 🙂

Lastly, did you notice how he takes-off this interlude with Santoor and lands perfectly with a Santoor ending? And that is the mark of a connoisseur. Strike that! Mark of a genius!

போதுமப்பா ராசா.. இதுக்கு மேல இன்னிக்குத் தாங்காது. இன்று முழுக்கா இந்தப் பாட்டுதான். நல்லா எங்க நெஞ்சுக்குள்ள ஒரு இடம் வச்சு நிரந்தரமா டேரா போட்டுட்டீர். இந்தப் பாட்டை இதுவரைக்கும் கேக்காதவங்க, ஆவாங்க clean-bowled. சந்தோஷமா ராசய்யா?

அனைவருக்கும் இனிய வாரக்கடைசியாக இருக்கட்டும் 🙂 !

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Song will be full of words that end with “kal” (“கள்” என்று முடியும் வார்த்தைகளை அதிகமாக கொண்ட பாடல் இது)

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaalangal Mazhaik Kaalangal Pudhu Kolangal (காலங்கள், மழைக் காலங்கள், புதுக் கோலங்கள்) from Ithayathil Oru Idam (இதயத்தில் ஒரு இடம் ) (1980)

Advertisements