Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அனைவருக்கும் வணக்கம். நேற்று நீங்கள் சொன்ன வாழ்த்துகளுக்கும், பெருமகிழ்ச்சி, ஆனந்தத்தோடு புதிரில் கலந்துக்கொண்டதற்காகவும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. அடிக்கடி நான் சொல்வதுபோல, இந்த #365RajaQuiz இல் கடினமாக இருந்தே ஆகவேண்டும் என்று ஒரு புதிர்கூட நான் வைப்பதில்லை. அனைத்துப் பாடல்களும் நான் கேட்டு ரசித்தவை, ருசித்தவை, என்னை வெகுவாக பாதித்தவை :). அவ்வப்போது சுலபமாகக் கொடுப்பதற்குப் பல காரணங்கள் உண்டு 🙂 ஆனால், இது புதிர் என்பதால், the joy of solving the puzzle by giving a song that is in someway challenging and pleasing, is the first and foremost objective I have set as my goal in this program. சரிங்களா?

ஏன் ஆங்கில நெடி சற்றே அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் யோசித்தால், அதற்குக் காரணம், தமிழ் தெரியாத அன்பர்களும் (மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் + வெளிநாட்டவர்கள்) இங்கே வருவதால், குறைந்தபட்ச ஆங்கிலமும் தூவிவிட்டால் அவர்களுக்கும் அது பயன்படும்.

சரி, இன்றைய புதிருக்குள் போவோம். இந்தப் படம் வெளியாகும் சமயம்தான் முதன்முதலில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ஒரு தமிழ்ப் படத்துக்கு banner வைத்திருந்ததைப் பார்த்துப் பரவசம் அடைந்தோம். அதேபோல, விவிதபாரதி அல்லாத அகில இந்திய வானொலி நிலையங்களுள் கோவை வானொலி நிலையத்தில் முதன்முறையாக வர்த்தக ஒலிபரப்பு விளம்பர jinglesக்காக இந்த படப் பாடல்தான் வந்ததாக நினைவு. எவரேனும் இதைத் தவறு என்று சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளத் தயார். அதிலும் இதோ, இந்த sequenceதான் போடுவார்கள்.

முதன்முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட சந்தோஷத்தில் சைக்கிள் ஓட்டியதுண்டா? பாருங்கடா… நான் என்னமாதிரி ஓட்டுறே!..ன்னு ஒருவித மகிழ்ச்சிப்பெருக்குல பல்லக்குல போகிற ராசா கணக்காப் போனதுண்டா? அப்படிப் போகும்போது என்ன உணர்ச்சி ஏற்படுதோ, அதுதாங்க எனக்கு இந்தப் particular sequence கேட்கும்போதும் ஏற்படும். நாள் பூராவும் கேட்டுகிட்டே இருக்கலாம்.

மென்மையாக வயலின் ஆரம்பிக்க, அதில் தலைவர்,ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தந்தன தந்தன தந்தனானானானானான்னு அவர் ஏத்திக்கிட்டு போகப்போக, கண்டிப்பா ஒரு hope, calm, bliss நம் முன்னால் கடந்துபோவதை மறுக்கவேமுடியாது. அந்த ஹம்மிங்குக்கு ஏற்றபடி ஒரு மெல்லிய percussionஐ வேறு உபயோகிக்கின்றார். அத்தோடு நிற்காமல் புல்லாங்குழலில் சொக்குப்பொடி வேறு போடுகிறார். Harry Potter எல்லாம் வேண்டாங்க எங்களமாதிரி ஆளுங்களுக்கு… இந்த Fantasy feeling போதுங்க…. 10,000 வருஷம் ரவுண்டு கட்டி வருவோம்ல… 🙂

சரி, இப்பவாவது விட்டாரா? இல்லையே. எப்படி முடிக்கிறாரு பாருங்க…. கும்முன்னு guitars ஓட. ஹ ஹ ஹா 🙂

இனிய வெள்ளி உங்களுடையதாக இருக்கட்டும். Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

வாரிசு நடிகர் நடித்த படம் / Actor for this movie was the son of another legendary actor.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Devanin Kovil (தேவனின் கோவில்) from Aruvadai Naal (அறுவடை நாள்) (1986)

Advertisements