Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இன்று 75வது நாள். முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. I thank each of you sincerely for being part of this project. Here is a superb clue to savor, enjoy, and cherish the 75th milestone. இந்த 75வது மைல்கல்லை அனுபவிக்க ஏற்ற புதிர்தான் இன்று. மிகவும் சுலபமானதும்கூட.

இன்றைய தலைப்பைப் பார்த்து உங்களுக்குத் தலை சுற்றுகிறதா? தேவையே இல்லை: “Hypnagogic Rx“. எல்லாருக்கும் தெரியும் “Rx” என்றால் என்ன என்று. அதான் அடிக்கடி டாக்டரிடம் சென்றால், ஒரு வித stylish கிறுக்கலில் prescription எழுதுவார்களே, அதுதான் “Rx”. Prescription என்று பொருள். அது சரி, அதென்ன “hypnagogic“?

மலர் எப்போது மலர்கிறது, மொட்டு எப்போது விரிகிறது, கருவில் உயிர் உதயமாவது எப்போது, இரவுக்கும் காலைக்கும் இடையே உருவாகும் அந்த முதல் வெளிச்சக் கீற்று எப்போது என்பதெல்லாம் இன்னும் நமக்குப் புலப்படாத ஒன்று. அல்லவா? அதுபோல, நம்மை மறந்து ஒருவித தூக்கக் கலக்கத்தில் நாம் இருக்கும்போது, அந்த விழிப்புக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் இடையே உள்ள nanosecondல் நாம் விழித்தும் இல்லாமல் உறக்கத்திற்குள்ளும் செல்லாமல் இருக்கும் ஒருவித இரண்டுங்கெட்டான் நிலை உள்ளதே, அதைதான் ஆங்கிலத்தில் hypnagogic என்று சொல்லுவார்கள். Either in school or during meetings, if you were just about to nod-off, that moment is pretty much called “hypnagogic”🙂

சரி அதற்கும் இன்றைய புதிருக்கும் என்ன connection? அதுதானே? இன்றைய புதிரில் வரும் இசை அத்தகைய நிலைக்கு நம்மை அள்ளிச் செல்லும் என்பதுதான். சொர்க்கம் மரத்திலே ? திரைப்படத்தில் இந்தப் பாடலை மரத்தில் தொங்கிக்கொண்டு பாடுவதுபோல அழகாக டைரக்டர் படமாக்கியிருப்பார். அந்த ஊசலில், கன்னத்தில் சீண்டிக்கொண்டுபோகும் காற்று, மேலே கடந்துபோகும் ஆகாயம், கீழே நம்மை அடையாளம் காட்டும் நீர்க்குட்டை, அதன்மேல் இருக்கும் சிறு மலர்கள் ஆகிய எல்லாவற்றையும் துல்லியமாக இசையில் இசைஞானி காட்டியிருப்பதே இந்தப் பாடலின் சிறப்பு.

இந்த BGM sequenceஐ, நான் repeat modeல் பதிவுசெய்துவைத்திருக்கிறேன். 36 நொடி sequence 6 நிமிடத்துக்கு இசைத்துக்கொண்டே இருக்கும், இடைவிடாமல்!🙂 ஒருமுறைகூட அந்த ஆறு நிமிடங்களும் என்னால் விழித்திருக்க முடிந்ததில்லை. அந்த இசையை அதை வெறும் இரண்டு முறைமட்டும் repeat modeல் வருவதுபோல் encode செய்து, நீங்கள் ரசித்து ருசிக்கவேண்டி பதித்துள்ளேன். Your latitude may vary🙂

என்னென்ன இசை வடிவங்கள் இதில் இருக்கின்றன பாருங்களேன். ஒரு programmed rhythmic beats பாடல் முழுவதுமே வரும். அந்த மரத்தில் ஊசல் ஆடும்வண்ணம் வரும் வயலின்களைக் கவனியுங்கள். அது ஒரு தனி trackல் பயணம் செய்துகொண்டே இருக்கும். உங்கள் imaginationக்கு நீங்கள் வெறும் rhythmic beatsஐ focus செய்தால், அது ஒரு வகை சுவை. அந்த வயலின்களைமட்டும் focus செய்தால் வேறு ஏதோ ஓர் இசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் மாய (hynagogic) நிலைக்குப் போவதை நன்றாக உணரலாம். பின்னர் electronic fluteல் மனம் லயித்தால், அது வேறு ஒரு நிறைவான உணர்வைக் கொடுக்கும்.

ஆக, என்னைப்போல நீங்களும் இதைத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டேஇருந்தால், உங்களை மறந்து உறக்க உலகத்துக்குச் செல்லமுடிகிறதா இல்லையா என்று சொல்லுங்கள்🙂

இன்று தூக்கத்தைவிட வேறு முக்கியமான விஷயம் என்னவாக இருக்கமுடியும்? America is notoriously called as “Sleep-deprived Nation” and the consequences are chilling. நோய் ஒருபக்கம், மனரீதியான எதிர்வினைகள் இன்னொருபக்கம் என்று தூக்கமின்மையின் கொடூரத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், பக்கவிளைவுகளை உருவாக்கும் Ambien போன்ற மருந்துகளின் தேவையே இல்லாமல் இந்த இசைஞானி இளையராஜாவின் Rx போதுமய்யா நமக்கு. பல தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு இதுவே சிறந்த வழி. இல்லையா?🙂

Have a great day, especially, have an extraordinarily special International Day of the Girl Child.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Ace Director Balu Mahendra’s renowned mentee, directed this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ilangkaathu Veesuthe (இளங்காத்து வீசுதே) from Pithamagan(பிதாமகன்) (2003)