Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மீண்டும் ஒரு புதிய வாரம் உதயமாகிறது, அது அனைவருக்கும் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள். கடந்த இரண்டு நாட்களாக அருமையான classic பாடல்களை ருசித்து ரசித்தோம். 70/365 தாயின் பாசத்தையும் 71/365 அண்ணனின் பாசத்தையும் பாங்குடனே எடுத்துக்காட்டின.

அந்த 70களின் periodல் இருந்து, இன்று 80களுக்குள் பயணிக்கிறோம்.

அருமையான பாடல். Revenge subject. நாயகன் பல extrasஉடன், வில்லன் முன்னால் சவால் விட்டு பாடுவதாக இப்பாடல் வரும். எக்கச்சக்க orchestration இந்தப்பாடலில் உண்டு. ஆரம்பமே, ஆசைய காத்துல தூது விட்டுங்கற styleல ஆரம்பிக்கும். ஒரு நிகழ்ச்சி மேடையில் நாயகன் பாடுவான். நடன அமைப்பும், பாடலின் கள அமைப்பும் இசைஞானி இளையராஜாவின் creativityக்கு சரியான சவாலாக அமைய, புகுந்து விளையாடி இருப்பார்.

புதிரின் இந்த இசை அமைப்பையே பாருங்களேன்.

அநீதியின் கோர முகமாக வில்லன் கண் முன்னால் உட்கார்ந்து இருக்க, அவனை troll செய்து தாக்கிப் பாடுகிறான் நாயகன். நீ ஒரு தூசிடா மவனே, நான் புயல் மாதிரி, பேத்துடுவேன் அப்படீன்னு எல்லாம் பெரிய dialogue வச்சு பாடறான். நம்மை ஏமாற்றினவர்களையும் பார்த்து இப்படி ஒரு பாட்டை பாடலாமா என்று மனம் பேதளிக்கும் அளவுக்கு, பாடல் செமையா இருக்கும் :). ஆக Justiceக்காக போராடும் இவனின் Courtல், இசைஞானி அலப்பறை கிளப்பி இருப்பது Trumpets & நாகஸ்வரத்தையும் மோத வைத்து! 🙂

ஆரம்பம் பயங்கர percussion drum beatsல் எகிறுகிறது. Extrasகளின் லாலா வேறு துணை புரிய, அங்கே சூடு பிடிக்கிறது நம் trumpets. இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதில், இதை நான் எடுக்கக் காரணம், இந்த சிறு நாகஸ்வரம் sequence தான். 20 நொடி markerல் இருந்து நான்கே நான்கு முறை மட்டும் நாகஸ்வரம் ஒலித்தாலும், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இருக்கிறதா இல்லையா? 🙂 அந்த நான்கு இடங்களையும் நான் SoundCloudல் குறித்துக் காட்டியிருக்கிறேன்.

வேறு எங்காவது, இப்படி ஒரு மேற்கத்திய Trumpets நம் மண்ணின் நாகஸ்வரத்தோடு மோதி பார்த்திருக்கின்றீர்களா?

இந்தத் திங்களை இந்தத் துள்ளல் பாடலோடு ஆரம்பியுங்கள். வாழ்க வளமுடன். 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This electrifying song featured ‘Major’ Sundarrajan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

பி.கு: சிலர் சுட்டிக்காடியதைப் போல, நாகஸ்வரம் அல்ல, அது ஷெனாய் என்பது உண்மையானால் என் பிழைக்கு வருந்துகிறேன். பொறுத்தருள்க. நன்றி.

Answer: Pachondhiye Keladaa Vachen Kuri Naanadaa (பச்சோந்தியே பாரடா, வச்சேன் குறி நானடா) from Andha Oru Nimidam(அந்த ஒரு நிமிடம்) (1985)

Advertisements