Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய பாடலுக்குப், புதிரைத் தாண்டி ஒரு வரவேற்பு இருந்ததைக் கண்டு நெகிழ்ந்துபோனேன். உணர்வுகளைத் தொடும் இசையும் பாடலும் மானுடத்தின் அன்பு நிலையை வளர்க்க உதவும் உன்னதக் கருணை என்றே நான் என்றும் நினைக்கின்றேன். நீங்கள் எழுதியிருந்த பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் பாடலுக்கு இணையாக என்றும் காலத்தால் அழியாத அளவுக்கு இருப்பது இந்தத் தளத்துக்கு வருபவர்களுக்குக் கண்டிப்பாக ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மிக்க நன்றி.

இன்றைய பாடலுக்கு வருவோம். இந்தத் தளத்துக்கு வரும் நீங்கள் ஒரு தங்கையாகவோ, அக்காவாகவோ, அண்ணனாகவோ, தம்பியாகவோ இருக்கலாம். இந்தப் புதிரின் இசையைக் கேட்டால் உங்களையும் அறியாமல் ஒருவித paralysis வந்ததுபோல இந்தச் சிறு இசைப் புதிர் எழுப்பும் உணர்ச்சி சூறாவளியில் சிக்குண்டு அமைதியாக அதே இடத்தில் சிலை ஆகலாம் :).

ஏனென்றால் பாடல் அப்படி! அதை இசையால் நம் உணர்வுகளுக்கு இசைஞானி போட்டிருக்கும் தீனி அப்படி!

நேற்றைய பாடலில் தாய் ஆவியாக வந்து தன் குழந்தையைப் பார்க்கப் பொறாமல் ஏங்குவதும் அதற்குத் தெய்வம் துணை நிற்கும் என்று நம்புவதாகவும் அமைந்திருந்தது. ஆனால் இன்றைய பாடல் அப்படி இல்லை. தம்பி எதேச்சையாக ஒரு வார்த்தையை அறியாமல் பேச்சோடு பேச்சாகச் சொல்லிவிட, அது அவன் அக்காவை மிகவும் பாதித்துவிடுகிறது. அவள் தன்னையும் அறியாமல் அழுதுவிட, தம்பி செய்வதறியாது துடிதுடித்துப் போகிறான். இவர்கள் இருவருக்கும் பெரிய அண்ணன் ஒருவன் உண்டு, அவன் அனைவருக்கும் நம்பிக்கை கொடுக்கும்வண்ணமாகப் பாடுவதாக அமைகிறது இந்தப் பாடல். அந்தப் பெரிய அண்ணன்தான் இவர்கள் குடும்பத்தின் அச்சாணி.

This elderly brother is the linchpin for his entire family and it is this brother that sings this hopeful song, full of excellent emotions, rendition, emoting as well as meaningful lyrics!

I want to thank All India Radio, Coimbatore for being a blessing in my life for all these timeless classics.

இந்தப் பாடலை பிடிக்காதவர்கள் என்று இதுகாறும் நான் எவரையும் சந்தித்தது இல்லை. இந்தப் பாடலை பாடிய பாடகரை எப்படிப் பாராட்டுவது? அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட பெரிய living legend ஆச்சே! இவரை வைத்து இசைஞானி இளையராஜா குறைந்த அளவு பாடல்களே கொடுத்திருந்தாலும், இந்தப் பாட்டை இவ்வளவு அழகாகவும், நுணுக்கமாகவும், hopefulஆகவும், ஆறுதலாகவும், ஒரு அண்ணன் தன் தங்கைக்காகத் ததும்பும் பாசத்தோடு நெகிழ்ந்து பாடுவதாகவும், தன் தம்பியையும் தாயையும் அரவணைத்துப் பாடுவதுபோலவும் வேறு ஒருவர் பாடியிருக்க முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. இளையராஜா இவருக்கு இந்தப் பாடலைக் கொடுத்ததால், காலத்தால் அழியாத பாடலை மேலும் timeless classicஆக ஆக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

என்னதான் சோகப் பாடலாக இது இல்லையென்றாலும் பாசத்தின் கணீர் குரலாலும் அர்த்தமுள்ள அருமையான பாடல் வரிகளாலும் இசைஞானியின் உணர்வு ரீதியான பாசத்தின் இசையாலும் சிலரின் கண்கள் பனிக்கலாம் 🙂 Take it as though this song imparts cathartic relief 🙂

இசையைக் கவனியுங்கள். Melodious flute தபேலாவுடன் ஓட, அங்கே எத்துணை அழகாக வீணை நரம்புகள் மீட்டப்பட்டு, violinsஓடு இணைந்துவிடுகிறது. இந்த sequenceலேயே தொண்டையில் ஒரு lump உருவாகலாம். Again, this song is NOT pathos, but, one full of positive emotions that appeal to the goodness of human conscience. Yes, that is what this song is all about.

Let us celebrate it. Happy Sunday!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Superstar Rajinikanth acted in this Thriller movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Endhan Ponvanname (எந்தன் பொன் வண்ணமே ) from Naan Vaazha Vaippen(நான் வாழ வைப்பேன்) (1979)

மென்மையான இசைக்கு, கவியரசர் கண்ணதாசனின் மேன்மையான, உருக்கும் வரிகள். என்ன பாட்டு…ஆஹா…அருமை…அருமை..

Advertisements