Tags

, , , , , , , , , , , , , , ,

We haven’t had pathos songs in our quiz for the most part, except one or two. So, today, we have a classic song in the quiz. And it deals with “child-deprivation“. When a child is forced to be bereft of one or both of its parents due to natural or man-made circumstances, that child is said to be deprived.

குழந்தைக்கு தன் தாய், தந்தை அல்லது இருவரிடம் இருந்தும் இயற்கையாகவோ செயற்கையாகவோ ஏற்படு(த்தப்படு)ம் பிரிவைத் தான் “child-deprivation” என்கிறார்கள். பல நாடுகளிலும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இது சட்டப்படி குற்றமாகும். ஜார்ஜியா சிறார் நீதிமன்றத்தில் பணிபுரியும்போது, இம்மாதிரி நிறையக் கோப்புகளைப் பார்த்து, ஆய்வு செய்து, நேர்முகம் கண்டு, குழந்தையின் சிறந்த நலன் கருதி Panelல் அமர்ந்து, முடிவெடுத்து, நீதிபதிக்கு பரிந்துரை அனுப்பும்போது நான் பார்த்த அவலங்களை என்னவென்று சொல்வது! பரிதாபத்திலும் பரிதாபம்.

இது இந்தியாவிலும் இப்போது எக்கச்சக்கம்! இம்மாதிரி அவலங்கள் எல்லாம் The United Nations Conventions on the Rights of the Childrenக்கு எதிரானதாகும் என்றாலும், அதைப் பற்றி எல்லாம் நிறையப் பேர் கவலைப்படுவதே இல்லை!

The ugly truth is that children never have a voice of their own and so offenses against them continue in broad daylight. Remember this when you read or watch a news-item at your locality.😦

குழந்தைகளுக்கும் உணர்வுகள் உண்டு, அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்று அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு வரும் இந்நாட்களில் தான் அவர்களின் உரிமைகளும் அதிகமாகவும், குரூரமாகவும், துரதிர்ஷ்டவசாமாகவும் பறிக்கப்படுகின்றன.

Child-deprivation need not be just physical — it can be purely emotional and psychological as well. Any amount of costly toys cannot satiate a child’s thirst for genuine love because no child is a toy or chattel! Child-deprivation is nothing but child-abuse and is usually perpetrated by people, who do not have any conscience whatsoever and by that very fact can have psychological issues like manic and borderline disorders.

இன்றையக் காலக்கட்டத்துக்கு இவைகள் உங்கள் எதிர் வீட்டிலும், அலுவலகத்திலும், இணையத்தில் அறிமுகமாகும் நண்பரின் வீட்டிலும் என்று கூட நடக்கலாம்.

ஆனால், இன்றையப் பாடல் அருமையான classic பாடல் என்பதால், இது பாடப்பட்டிருக்கும் சூழ்நிலையானது physical child-deprivation பற்றியது. இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் காலத்தை விஞ்சிய ஹிட் பாடல்கள்.

தாய் இறந்துவிடுகிறாள். குழந்தை அனாதையாக மாதாகோயில் வாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறது. அந்தத் தாயின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும்?

Is there anything close to the torment, this bereaved parent will feel at the sight of its child’s deprivation? The feeling this parent feels at not being able to touch, caress, hug and feed her child will be fully brought out well by Ilaiyaraaja.

அம்மா ஆவியாக வந்து இந்தப் பாடலை அவள் குழந்தைக்குப் பாடுகிறாள். அந்தக்காலத்தில் காதலனைப் பார்த்து, மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா என்று அருமை மெல்லிசை மன்னர் MSV இசைத்தப் பாடல் போன்ற பாடல் இது.

இந்தப் பாடலில் இசைஞானி கொட்டியிருக்கும் பாச உணர்வும், அந்த பிரிவின் வேதனையும், சோகமும், பாடலைக் கேட்டால் மட்டுமே உணர முடியும். அதுவும், வெறும் சோக உணர்வை மட்டும் வெளிக்கொணராமல், அந்தப் பிரிவாற்றாமையை ஒரு தாயின் மனநிலையில் இருந்தும் சரி, அந்தக் குழந்தையின் நிலையில் இருந்தும் சரி, அட்டகாசமாக தனது இசையாலேயே சிலை வடித்திருப்பார் இசைஞானி.

கோயம்புத்தூர் அகில இந்திய வானொலி நிலையத்தினாலேயே மட்டுமே, சிறுவனாய் மனதில் பதித்துவைத்துள்ள பாடல் இது.

Violins and triple-drumsல் ஆராம்பிக்கும் இசையில், அந்த eerinessஐ அழகாக ஒரு தொடர் flute with parallel Veena interludesல் காட்டுவது இசைஞானத்தின் உச்சம். அந்த flutesஐ மட்டுமே தயவு செய்து focus செய்து கேளுங்கள்.

எப்படி இருக்கிறது?

அதே போல, அந்த flute + Veena sequence முடிந்து வரும் சந்தூர் interludes கேட்டீர்களா?

இசைஞானி ஒரு பக்கம் என்றால், இந்தப் பாடலைப் பாடிய பாடகரை என்னவென்று பாராட்டுவது? இவரைத் தவிர வேறொருவர் இந்தப் பாடலை பாடியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு, உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார்.

I try to balance our Quiz with varying moods and genres. Usually I do not give pathos clues, but, we cannot ostracize them entirely just because there is a lot of talent that Ilaiyaraaja would have demonstrated in tunes precisely as these🙂

Have a great weekend🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Late Sujatha featured in this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Raaja Chinna Raaja (ராஜா சின்ன ராஜா ) from Poonthalir (பூந்தளிர்) (1979)