Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம் நண்பர்களே. நேற்றைய புதிர் சிலருக்குக் கடினமாகவும், சிலருக்கு மிக எளிதாகவும் இருந்ததாக இருவேறுவிதமான கருத்துகள் வந்து சேர்ந்தன. Google புண்ணியம் நேற்றைய பாடலுக்கு இல்லை. அதே போல thiraipaadal.com அருளும் இல்லை. ஆக, படத்தைச் சரியாகக் கணித்தாலும் அது என்ன பாடல் என்று கண்டுபிடிக்கமுடியாவண்ணம் சிக்கிச் சின்னாபின்னம் ஆன சிலரின் பொருமல் கேட்கிறது :)) விடுங்க பாஸ். நாம பாக்காததா? 😉

A small request: Let us support social projects like Welcome Back Gandhi. You can download the songs legally from that website.

போகட்டும். அதற்கு ஈடு செய்வதுபோல வருவதுதான் இன்றைய பாடல். இந்த பாடலைப்பற்றி நான் பேச முனைந்தால் பல பக்கங்கள் வேண்டும்.

Interim Update:@WhoIsJaganன் இந்த பின்னூட்டம் கண்டிப்பாக நான் சொல்லியிருக்கணும். கோயம்புத்தூர் வானொலி என்று இல்லை, திருச்சிராப்பள்ளி, இலங்கை என்று இந்தப் பாட்டு ஒலிக்காத வானொலி தமிழ் உலகில் இல்லை!

வேறெதோ பாட்டெல்லாம் சொன்னீங்க, ஆனா கோவை வானொலில இந்த பாட்டுதான் நான் அடிக்கடி கேட்ட ஞாபகம் இருக்கு.

எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவர் இந்தப் பாடலை அவ்வளவு அழகாகப் பாடியதைச் சொல்வதா, அல்லது அதற்கு ஈடுகொடுத்துப் பாடும் பாடகியைப்பற்றிச் சொல்வதா, அல்லது இந்தப் புதிரின் மையப்பொருளான அந்த அட்டகாசமான பின்னணி இசையைப்பற்றிச் சொல்வதா, அல்லது அதை மிக அழகாக choreograph செய்து இந்தப் படத்தின்மூலம் தமிழ் திரைப்படத்துறையில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்த டைரக்டரைச் சொல்வதா?

அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலிலும், இந்தப் புதிரில் வரும் பின்னணி இசையிலும் உண்டு. இசைஞானி இளையராஜா மண்வாசனையை அள்ளி அள்ளி விட்டிருக்கும் இந்தப் பாடலில் எதிர்பாராதவிதமாக ஓர் அம்சமான Western Classical Violin sequenceஐ நுழைத்திருப்பது புதுமையின் உச்சம். அதுநாள்வரையில் இப்படி ஒரு fusionஐத் தமிழ் மக்கள் நுகர முடிந்ததாக எனக்கு நினைவில்லை. Maestro Ilaiyaraaja was probably getting ready to make this kind of fusion his mainstay for the rest of his career. I cannot recollect — before this number — a Western Classical sequence, intelligently woven into a rustic, Tamil folk song.

புல்லாங்குழல், வயலின், சிறு பறை என்று மண்ணுக்கே உரிய இசைக்கருவிகள். அங்கே எதிர்பாராதவண்ணம் ஒரு மேற்கத்திய மெலடி வயலின் சிம்பொனி.

வயக்காட்டில் உழுவது, அறுவடை செய்வது, மாடு பூட்டி ஆற்றில் அக்கரைக்குச் செல்வது, காலில் சதங்கை அணிந்து ஆடவர் ஆடுவது, நாயகனும் நாயகியும் சிரித்து அளவிளாவி மகிழ்வது, தண்ணீருக்குள் கடல் அலைபோலே பெண்கள் முன்னேறி வருவது என்று அவ்வளவு அழகாகப் படமாக்கியிருப்பார் டைரக்டர். இசைஞானியின் ஒவ்வோர் இசை உணர்வையும் பிரதிபலிக்கும் இந்தப் பாடலின் choreographyஐ கையாண்ட Director & Cameramanக்கும், இந்தப் பாடலை இவ்வளவு சிறப்பாக பாடியிருக்கும் இரு பாடகர்களுக்கும் எவ்வளவு பாராட்டுகள் அள்ளித் தெளித்தாலும் தகும்.

காலத்தை விஞ்சிய பாடல் இது. நம் மண்ணுக்கே உரிய பாடல்! எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் இம்மாதிரியான பாடல்கள் கடைசி வரை ஜாலியாக நிற்கும்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Maestro Ilaiyaraaja also scored for a movie, whose title bore the character name of the heroine in this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Sevvanthi Poo (செவ்வந்தி பூ ) from 16 Vayathinile(16 வயதினிலே) (1976)

Advertisements