Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நீண்ட நாள்களுக்குப் பிறகு, இன்று இந்தப் புதிரில் வருவது Prelude. சரியான நேரத்தில் நினைவூட்டி request வைத்த அருமை நண்பர் @NChokkanக்கு நன்றி.

பசுமரத்தாணி. இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் இந்த வார்த்தைதான் எனக்கு ஞாபகம் வரும். அப்போது நான் சிறுவன். டில்லி செட் என்று சொல்லப்படுகிற,, சாய்வு நிலையில் இருக்கும் tape-recorderல் இந்தப் படப் பாடலை Echo ஒலி நாடாமூலம் கேட்டுப் பரவசப்பட்டதாலோ என்னவோ, இந்தப் படத்தை இதுவரை காணக்கிடைக்கவில்லை. ஆனாலும், அதன் ethos உள்ளத்தில் நிறைந்துள்ளது.

நீங்களும் இந்த preludeன் பெரும் விசிறியாக இருக்கலாம். இதுவரை கேட்காமல் இருந்தால் இந்த weekendமுழுதும் இதைக் கேட்பதிலேயே கழிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

There is nothing more important than a smile of a child.

1980களில், இன்றைய கேவல நிலையைவிட, குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களும் பாடல்களும் சற்றே அதிகம் என்று கூறலாம். ஏனோ அது இப்பொழுதெல்லாம் குறைந்துபோய்விட்டது. பாசம், நேசம், குழந்தைகளின்மீது காட்டப்படும் அக்கறை எல்லாம் பழைய பஞ்சாங்கம் போன்றது என்று ஒரு கருத்து நிலவி வருகிறதோ என்று அச்சம்கூட வருகிறது. இந்தப் பாடலைப் பல வருடங்கள் கழித்து YouTubeல் பார்த்தபோது, மகிழ்ந்தேன். பரவாயில்லை, இன்னொரு அருமையான இசைஞானி பாடலைக் கொல்லாமல் விட்டார்களே என்று பூரித்தேன்.

அருமையான குளிர் மழைப் பிரதேசத்தில், நாயகனுடன் குழந்தை நடக்க, ஓட, விளையாட, கேளிக்கை நிகழ்ச்சிகளை கண்டு களிக்க என்பது போல சீன்கள் போகும். ஆனால் இந்த ஆரம்ப prelude இருக்கிறதே, கட்டி இழுத்துவிடும். கண்டிப்பாக நமக்குப் பிடித்த குழந்தைகளின் ஞாபகத்தை வரவைத்துவிடும்.

அருமையான, அமைதியான Piano ஆரம்பிக்க, அதனூடே ஒரு Flute ஓர் இனம்தெரியாத சோகத்தோடு melodiousஆக பயணம் செய்ய, அவை இரண்டோடும் Guitar இணைகிறது. இந்தக் கலவையை என்னவென்று சொல்வது! Melodyன் மன்னன், Melody Instrument Violinன் துணையே இல்லாமல் எங்ஙனம் இப்படி ஓர் இசையை மீட்டினார் என்று நினைக்க நினைக்க இன்னும் ஆனந்தம் இரட்டிப்பாகிறது.

இந்தப் பாடலின் interludesல் ராஜா முழுக்க முழுக்க, Western Classical போன்ற இசை சங்கதிகளை அழகாக அந்தக் காலத்திலேயே கையாண்டிருப்பார். அந்த sequenceகளில் violin உண்டு. நம் preludeஇல் violin இல்லை. அதேபோல, இந்தப் பாடல் lip-sync இல்லாமல், இயற்கையாக இருக்கும். வாயசைப்பே இல்லாமல் வந்த அக்காலத்துப் பாடல்களில் இதுவும் ஒன்று. யார் கதாநாயகன் என்று யோசிக்கும்படி, இரு வேறு நாயகர்கள் நடித்த படம்.

படமே பார்க்காவிட்டாலும் இந்த இசையைக் கேட்டால் ஒரு குழந்தையின் ஞாபகம் வரவில்லையா? ஒரு குழந்தையின் சிரிப்புக்காக நாயகன் இந்தப் பாடலில் எடுக்கும் முயற்சிகளைக் கண்டால் நாமும் ஒரு குழந்தையின் முகத்தில் ஒரு துளி சிரிப்பை வரவழைக்க எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றும். அதில்தான் மனிதத்தன்மையே அடங்கி இருக்கிறது. அது ஒன்று இல்லையேல், மற்றவை எல்லாம் இருந்தாலும், எதுவும் இல்லாததற்கு சமம்.

ஒரு குழந்தையின் சிரிப்பில் கடவுளைக் காண்பதும் அதன் சோகத்தில் பல சாபங்களை வாங்குவதும் அவரவர் கைகளில்தானே இருக்கிறது? இம்மாதிரி குழந்தைப் பாடல்களில் நம் இசைஞானி காட்டும் அந்த perfectionஐயும், அந்த ஈடுபாட்டையும், அந்த உணர்ச்சிப் பெருக்கையும் என்னவென்று சொல்வது? ராஜா, யூ ஆர் காட்???

Have a nice weekend. Enjoy your Saturday.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie came from an influential Movie Productions Company of Producer-cum-politician R.M Veerappan: Sathya Movies.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Manthira Punnagaiyo (மந்திரப் புன்னகையோ ) from Manthira Punnagai(மந்திரப் புன்னகை ) (1986)

Advertisements