Tags

, , , , , , , , , , , ,

நேற்றைய புதிரில்தான் என்னவொரு கலகலப்பு! கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் முதற்கண் என்னுடைய நன்றிகளைச் சொல்லியே ஆகவேண்டும் 🙂

சிலர் கேட்டாங்க: “ஏன் நீங்க பொறி வச்சுட்டு, அதப்பத்திப் பின்னூட்டம் வேற போட்டீங்க?”.

முதலில் ரொம்ப கப்சிப்ன்னுதான் இருந்தேன், எப்பவும்போல. ஆனா, இது ஒரு fun quiz program. The objective is to not make anybody suck, but, to just facilitate enjoying the simple pleasure of solving a moderately complex puzzle, that happens to be a musical riddle. That is all. 🙂 Procrustesபோல கறாரா இருந்தா, அப்புறம் அந்த funஏ இல்லாம போயிடும்னுதான்.

மேலும், ஆரம்பத்துல Twitter DMலையும், இங்க பின்னூட்டத்துலயும் நிறைய பேர் தடுக்கி விழுந்ததப் பார்த்து சும்மா இருக்க முடியல :). அதான். வேற விஷயம் ஒன்னும் இல்ல. இருந்தாலும், எல்லாரும் நல்ல sportiveஆ எடுத்துகிட்டீங்க. நன்றி.

இன்றிலிருந்து, எப்பவும்போல நிம்மதியா நீங்க எத்தனை பதில்களை வேணும்ன்னாலும் அனுப்பலாம். கூடியவரை, இங்கேயே பின்னூட்டமா விடுங்க.

சரி, இன்றைய புதிருக்கு வருவோம். அருமையான பாடல். தென்றல் வந்து நம்மைத் தீண்டும் ஒரு சுகத்தை இந்தப் பாடல் கண்டிப்பாகத் தரும். ஒரே சீரான beatங்க. ஆமாம். ஆரம்பமே ஒரு சிறு மேளத்தோடு chorus பாப்பாக்களால் தொடங்கும். தமிழ் வளர்த்த மதுரை சம்பந்தப்பட்ட ஓர் இடத்தின் பெயரைப் பாடிக்கொண்டே பாடல் ஆரம்பமாகும் விதம், கொள்ளை அழகு.

இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. இது எந்தத் திரையரங்கில் வந்தது என்றுகூட எனக்குத் தெரியாது. என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில மாற்றங்களால் இந்தப் படத்தைப் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது. ஆனால், என்னுடைய favorite recording centerஆன கோவை Royal Electronics கடை நபரிடம் சென்று வேறு சில பாடல்களைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது, இந்தப் படத்தின் CDஐக் காட்டி, “ரெக்ஸ், இது உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். At least 4 பாட்டு தாராளமாக் கேட்கலாம்” என்று அவர் சிபாரிசு செய்யவே, “சரி போட்டுடுங்க” என்றேன்.

பதிவு ஆகி வந்த நாள்முதல், இந்தப் பாடலைக் கேட்பதை என்னால் நிறுத்தவே முடியவில்லை. பாடிய நபர்களின் இதமான குரலாலும், ஒரு மென்மையான percussion பாடல் முழுவதும் வருவதாலும், இனிய இசைக் கருவிகளின் அடக்கி வாசிக்கப்பட்ட பாங்கினாலும், there is something so deep, mystical, and profound about this song. It has to be not just listened, but, experienced.

நான் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய roommate (தீவிர ARR ரசிகன்) இந்தப் பாடலையே விரும்பி விரும்பிக் கேட்டுக்கொண்டிருப்பான். இன்று இணையத்தின்மூலம் நிறைய பேர் இந்தப் பாடலைக் கேட்டிருக்கலாம். ஆனால் இது வந்த புதிதில் அவ்வளவாகக் கவனிக்கப்படவில்லை என்ற வருத்தம் எனக்கு இன்றுவரை உண்டு.

இந்தப் படத்திலேயே வேறு சில பாடல்களும் அருமையாக இருக்கும். இந்தப் புதிரை விடுவிப்பவர்களுக்கு அவை அனைத்தும் சரியான பரிசாக அமையும். சீக்கிரம் கண்டுபிடியுங்கள். புண்ணியமாகப்போகும் சாமி ;-))

Wish you the very best 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

இந்த classic duet பாடலை ஜோடியோடு சேர்த்துப் பாடுவது இசைஞானி இளையராஜா! Maestro Ilaiyaraaja bats this floral duet song with another great female voice!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Oru Aalam Poovu (ஒரு ஆலம் பூவு) from Punniyavathi(புண்ணியவதி) (1997)

Advertisements