Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய புதிரை வெற்றிகரமாக முடித்தமைக்கு முதலில் உங்களுக்கு வாழ்த்துகள். இன்று ஒரு interesting clue.

சாலையில் இன்றைய தேதியில் traffic jam இல்லாமல் எந்த நாட்டிலும் ஊரிலும் செல்லமுடியாத நிலை. அட்லாண்டாவிலிருந்து அமிஞ்சிக்கரை வரைக்கும் இதே கேவல நிலைமைதான். இவ்வாறு சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் எந்த அளவுக்கு மக்கள் மன உளைச்சல் அடைகின்றார்கள் என்பதைப் பல ஆராய்ச்சிகளில் அளவிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

சாதாரணமாக இன்றைய போக்குவரத்து நெரிசலில் நாம் stress அடையும் அளவு, ஆதி கால மனிதன் தன்னைக் கொல்ல வரும் சிங்கம், புலி போன்ற மிருகங்களைக் காணும்போதுமட்டுமே ஏற்படக்கூடிய fight-or-flight stressன் அளவாம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியா வரை road-rage எனப்படும் சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் வன்முறையும் அதிகரித்துக்கொண்ட ுவருவது வருந்தத்தக்க ஒரு modern-times’ malady.

இதற்கும் இன்றைய பாடலுக்கும் சம்பந்தம் என்ன? இருக்கிறதே. இசைஞானி அடிக்கடி சொல்வதுபோல, எல்லாவற்றிலும் இசை உள்ளது. அந்தக் கூற்றை மெய்ப்பிப்பதுபோல வந்துள்ளதுதான் இன்றைய புதிர். சாலையில் ஏற்பட்டுள்ள நெரிசலில் எல்லா வண்டிகளும் தங்கள் ஒலிப்பானை ஒலிக்க, அதுவே ஓர் இசையாக இசைஞானியின் imaginationக்குத் தோன்ற, அது இந்தப் பாடலின் BGMஆக உருவாகிவிட்டது. இவரின் imaginationக்கு இன்றைய பாடல் ஒரு சிறு sample. அவ்வளவே.

இம்மாதிரி நாமும், நம்மைச் சுற்றி நடக்கும் நெரிசலைப் பார்த்துப் பொங்கி எழாமல், இசைஞானியின் இசைக் கண்களைக் கொண்டு நோக்கினால் stress நீங்கி, ஓர் அமைதி பிறக்க வழி உண்டு அல்லவா?

இந்த ஒலிப்பான் ஒலிகளைத் தாண்டி, trumpets ஒலிக்கும் அழகை என்னவென்று சொல்வது! இந்தப் பாடல் வெளிவந்த போது இதை ஹம் செய்யாத இளசுகளே கிடையாது. இந்த இயக்குநர் நிறைய மசாலா படங்களை எடுத்து வெற்றி கண்டவர்.

இந்தத் தனித்துவம் கொண்ட போக்குவரத்து நெரிசல் பாடல் எது என்று தெரிகிறதா? கண்டுபிடியுங்கள். Please NO Sound Horn :-))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This is a male-chorus based song.

Answer: Potta Padiyuthu (போட்டா படியுது) from Satya(சத்யா) (1988)