Tags

, , , , , , , , , , , , , ,

ஆணோ, பெண்ணோ, குழந்தையோ, வயோதிகரோ, சமூகக் கழிவுகளில் சிக்குண்டு, வாடி, வதங்கி போய் இருக்கும் யாரை வேண்டுமானாலும் இன்றைய இசை அள்ளிச் செல்லலாம். இந்த இசைக்கு கரையாத மனமும் இருந்தால், தயவு செய்து எனக்கு DM செய்யுங்க🙂 அவ்வளவு அருமையான பாடலின் பின்னணி இசை இது. புதிரின் ஆரம்பம் புல்லாங்குழலோடும், வயலினோடும், ஒரு மென்சோக ராகத்தோடு, வழி தெரியாத ஒரு hopelessnessஓடும் செல்கிறது. It does start on a somber and rueful note, but, certainly not on a too sorrowful note. சட்டம், நீதிமன்றம், அரியணை, ஆட்சி, எல்லாம் இருந்தும் நோகடிக்கறவன் நல்லாவே நோகடிச்சுட்டு தான் இருக்கான். அதை எதிர்த்து போராட துணியறவன், சில சமயம் இந்த கழிசடை status quoவை பார்த்து நம்பிக்கை இழக்கவும் செய்யறான். இந்த உணர்ச்சிகளை எல்லாம் இந்த இசையில் 13-second marker வரை துல்லியமாக convey பண்ணிடுறார் ராஜா. ஆனா, அந்த hopelessness நிரந்தரம் இல்லை. இருட்டில் ஒரு வெளிச்சம் — hope — கண்டிப்பாக உண்டு என்பதை குறிப்பால் உணர்த்தவே அருமையான, இதமான வீணை interlude 13-second marker to 23-second marker இழைத்து கொடுத்திருப்பது போலத் தோன்றுகிறது. அந்த இதமான ஒத்தடத்துக்கு பின்னர், சுற்றி நடக்கும் அநீதிக்கு எதிராக பொங்கி வரும் கோபத்தை உணர்த்த violin interludes படு seriousness உடன் வருவது 24-second markerல் இருந்து.

இசை நடுவில் அருமையான கிடார், பியானோ பீசசை மிஸ் பண்ணிடாதீங்க🙂

இவ்வளவு அருமையான பாடல், அந்தக் காலத்து ஆல் இந்திய ரேடியோ staple. கண்டுபிடிங்க. இந்த டைரடக்கருக்கு ராஜா கொடுத்த பாடல்கள் என்றுமே நினைவில் நிற்பவை; காலத்தை கடந்து நிற்பவை.

கண்டுபிடியுங்கள்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

K.J. Yesudas sang this song by noted lyricist Kavignar Vaalee. This movie had several luminaries making their debut on screen.

Answer: Manadhil Urudhi Vendum (மனதில் உறுதி வேண்டும்.) from Manadhil Urudhi Vendum(மனதில் உறுதி வேண்டும்.) (1987)