Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

இந்தப் பாடலுக்கு சர்டிபிக்கேட்னு ஒன்னு கொடுக்கொணும்னா அது “A” தான். மழைப் பாடல். கேக்கணுமா? அனால் இந்தப் பாடலை நான் பார்த்ததே இல்லை. சரி…சரி. அதாவது, அந்தக் காலத்தில் பார்த்தது இல்லைன்னு சொல்ல வந்தேன். முழுக்க முழுக்க இந்தப் பாடலும் ரேடியோவில் அடிக்கடி கேட்டது. பின்னர், இணையத்தில் நிறைய ராஜா ரசிகர்களுக்கும் இது பிடித்தப் பாடல் என்று தெரிந்து கொண்டேன். பாடல் அருமையான சூடேற்றும் மெலடி. இரண்டு பிரபல பாடகர்கள் இதைப் பாட, பாடலின் ஆரம்பமே அருமையாக இருக்கும். ஒரு மாம்பழ வண்டியின் மீது நாயகி படுத்திருக்க, அந்த வண்டி பூகோளம் சுழல்வது போல சுழல, மழை பேய, ஒரே குதூகலமாக ஆரம்பிக்கும். ஆரம்ப இசையும் ஒரு ஹம்மிங்குடன் தூக்கலாக ஆரம்பிக்கும். சந்தூரை பிச்சு உதறி ஆரம்பிப்பார் இசைஞானி. இந்தப் பாடலை நீங்கள் இது வரை கேட்டிராவிட்டால், கண்டிப்பாக continuous-loopல் விரும்பி கேட்பீர்கள் என்பது கேரண்டி.

நமக்கு வந்திருக்கும் புதிரில் ஆரம்பம் ஒரு அருமையான வயலின் பீஸ். அதுல சந்தூரையும் போட்டு கலக்கி இருப்பார் ராஜா. புதிர் முடியும் போது ஹார்மோனியம் வேறு. கேக்கணுமா? இசை எந்த அளவுக்கு interludesல் கலை கட்டுதோ, அதே அளவுக்கு சரணமும் சரி, பல்லவியும் சரி, தூக்கலாக இருக்கும். ஒரு வேக tempo இருக்கும். இம்மாதிரி பாடல்கள் என்றாலே அதெப்படி ராஜாவுக்கு முறுக்கு ஏறி இசை கொட்டுதோ! தெய்வத்துக்கே வெளிச்சம்.

Have an excellent weekend. Enjoy the rains. Don’t overstep. LOL🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

வாரிசு நடிகர் மழையில் நனைந்து கொண்டே அப்சரஸ் பெயர் கொண்ட நடிகையோடு சூடாக ஆடினார்.
Actor was a son of another actor and he danced with the actress whose name is one of the Apsaras.

Answer: Alangatti Maamazhayam (ஆலங்கட்டி மாமழையாம்) from Ezhuthaatha Sattangal(எழுதாத சட்டங்கள்) (1984)