Tags

, , , , , , , , , , ,

இதுவும் ஒரு அருமையான காதல் டூயட். இதமான, மென்மையான டூயட். பாடலின் ஆரம்பமே ஒரு மெலிதான ஆர்மோனியத்தில் ஆரம்பித்து, ஜிவ்வென்று கீபோர்ட்ஸ், சின்தைசைசர் என்று அது பாட்டுக்கு போகும். அப்ப வர்ற interlude தான் நீங்க இன்னிக்கு கேட்டுட்டு இருக்கறது. பாடல் வந்த உடனேயே கவனிக்கப்பட்டது. டீக்கடை, பேருந்து, பஸ் ஸ்டேண்டு, etc. இந்தப் பாடலை இன்று கேட்டாலும் எனக்கு ஜிவ்வென்று கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் பேருந்தில் பயணம் செய்த இனிய நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது. சரி, அது சொந்தக் கதை. இந்தப் பாடல்ல இசைஞானி நிறைய chorusஐ தாராளமா use பண்ணியிருப்பார். பாடல் முழுதும் அதுக பாடிட்டே வர்றது, கூட்டமா வானம்பாடிகள் வர்ற மாதிரி ஒரு effect இருக்கும். அதே மாதிரி, அருமையாக ஷெனாய் கருவியை இந்தப் பாடலின் 2 interludesக்கும் பயன்படுத்தியிருப்பார் ராஜா. பாடல் முழுதும் ஒரு light percussion இருந்துட்டே வருவது மேலும் இதம்.

இந்த interludeன் ஆரம்பமே அந்த அதிரும் bass & bass guitar தான். எப்படி இருக்கு? சூப்பரா? சாதாரணமா ஆரம்பிக்கற மாதிரி இருக்கும் போது, அப்படியே தேனுண்ட வண்டு போல ஒரு ஏற்ற noteல் அந்த கோரஸ் பெண்மணிகள் கொடுக்கும் டேக், செம! அவங்க அந்த கோரஸ் கொடுக்க கொடுக்க, கொஞ்சிக்கிட்டு சீண்டுது பாருங்க வயலின்ஸ். ஆஹா! என்ன அருமை! முனிவனுக்கு கூட காதல் வந்துடும், அதுனால இந்த interludesஐ கேக்காம இருக்கறது அவங்களுக்கு நல்லது😉 அந்த வயலின்ஸ் & பெண்கள் கோரஸ் segue ஆவது, சங்கமிப்பது, அருமையான ஷெனாயில்.

ஆதலினால் காதல் செய்வீர். பதிலும் பதிவு செய்வீர் –>;; கீழே பின்னூட்டமாக🙂

பி.கு.: இம்முறை புதுமையான ஒரு lifeline clue கொடுத்திருக்கேன்(Clue # 1). பிடிக்கலைன்னாவோ, இல்ல இது முதலுக்கே மோசம்னு feel பண்ணினாவோ, தாராளமா அதை பின்னூட்டத்தில பதிவு செய்யுங்க. உதவலைன்னு தெரிஞ்சா இந்த மாதிரி lifeline clue இனிமேல் தர மாட்டேன். Just trying various ways🙂 Thanks.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

(1) இந்த இசை முடியும் இடத்தில், “கோடைக்கானல் சாரலில்” என்ற வரி ஆரம்பமாகும்.
(2) இந்த வாரிசு நடிகர் நடித்த படத்துக்கு 21ஆம் நூற்றாண்டில் வேறொரு படத்துக்கு கூட ராஜா இசை செய்திருந்தார்.
(1) The verse immediately after this music is “Kodaikaanal saaralil”.
(2) This hero’s father was also a hero of yesteryear and IR did music for this hero in the 21st century too.

Answer: Kanne Ingu Kalyana (கண்ணே இங்கு கல்யாண) from Aanazhagan(ஆணழகன்) (1995)