Tags

, , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்று உருமி மேளத்தில் உறுமிய அதே இசைஞானி, இன்று காதல் வயப்பட்டிருக்கும் இருவரின் மனப் போராட்டத்தை பிரதிபலிக்கும் காட்சிகளுக்கு அமைத்திருக்கும் பின்னணி இசை தான் highlightஏ. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், “பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து” திருக்குறள் தான். அவர் ஒன்னே முக்கால் அடில சொன்னார்; நம்ம இசைஞானி 3.5 நிமிடத்தில இசைத்து சொல்றாரு! அவ்வளவே.

இந்த track தான் இதுவரை #365RajaQuizல் நீளமானது. இதை ரசித்து புசிக்கும் வண்ணம், என்கோடிங்கில் 1.5-நொடி breakஐ ஆங்காங்கே அறிமுகப்படுத்தி இருக்கின்றேன். அதற்கு காரணம் உண்டு. இந்தப் பின்னணி இசையை 5 பகுதிகளாக, பிரித்து ரசித்து கேட்டீர்கள் என்றால், இசைஞானி எப்படி உணர்ச்சிகளோடு விளையாடி, தனது இசையால் நம் உள்ளங்களை வருடுகிறார் என்பது புலனாகும்.

ஒரே டியூன். ஆனால், வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு எவ்வளவு திறமையாக அதை பயன்படுத்தி அசத்துகிறார் என்று பாருங்கள்.

பகுதி 1 – துள்ளல் காதலில் இரு குறுகுறு மனங்கள் (1-second to 24-second marker)

நாயகனும் நாயகியும் காதல் வயப்படுகிறார்கள். They fall in love, but, it happens so naturally. Is it appropriate? Is it right? சரியா? தவறா? தெரியவில்லை. எல்லாரும் முதலில் காதலில் விழும்போது அன்பளிப்பு வாங்கித் தருவாங்களே, அது மாதிரி இவனும் தர்றான். உடனே, நாயகிக்கு ஒரு இனம் புரியா பூரிப்பு, மகிழ்ச்சி! கூடவே, முதன்முதலாக காதலர்களுக்கு தோன்றும் “காதலிச்சு தான் பார்ப்போமா? என்ற thrill ஒரு பக்கம், ஆனால், அது சும்மா டச்சிங் டச்சிங் காமமாக இல்லாமல், மங்களகரமான காதலாக இருக்க வேண்டும் என்ற உயர்வுள்ளளால் நிறைந்து இருப்பதை பிரதிபலிக்கவே, மோதும் புல்லாங்குழலோடு மங்களகரமான மத்தளம் வேறு! இந்த மாதிரி ஒரு காதலின் துள்ளலுக்கு இப்படி flute and மத்தளம், வேறு யாராவது attempt பண்ணி இருக்காங்களா இதுக்கு முன்னாடின்னு என்னால சொல்லவே முடியலை. So, the enrapture and adventure of love is fully manifested in these first 24 seconds.

பகுதி 2 -ஊடலில் பிரிந்த இரு வருத்தப்படும் மனங்கள் (25-second to 45-second marker)

அதே டியூன் தான் இங்கேயும். ஆனா பாருங்க, ரெண்டு பேரும் ஒரு ஊடலில், மோதிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அந்தப் பிரிவு கோபத்தையும் உருவாக்குகிறது, பரிதாபத்தையும் வரவழைக்கிறது. ஆனால், மெலிந்த கொடி போன்ற நாயகி, எப்படி தனது கோபத்தை விடுவது? How can she get out of her state of denial? This segment of the score beautifully captures that mental torment. அந்தக் கோபம், அவளுக்கு மகிழ்ச்சியோடு கூடி குழாவிய நாட்களை நினைவுபடுத்துகிறது. இருந்தாலும் அவள் மனதில் கோபம் ஒரு பக்கம், பரிதாபமோ மறுபக்கம். இதை எப்படி அய்யா இசையில் சொல்ல முடியும்? இதோ காட்டியிருக்கிறாரே தங்கக்கட்டி இசைஞானி!!!! And look, how effortlessly he concludes this segment with a Guitar. அம்மாடியோவ்!

பகுதி 3 – “அவரின் நினைவுகள் இவளை வாட்டுமே!” (46-second to 1:16 marker)

அதே டியூன் தான் இங்கேயும். சந்தூரில் ஆரம்பித்து, அழகு fluteல் தொடர்கிறதே. உங்கள் இதையத்தை பதம் பார்க்கிறதா? எனக்கும் தான் 🙂 வாடிய அவளின் மனப் போராட்டத்தில், ஒரு வித flashback ஓடுகிறது. “என்னால் முடியலையே…அவரை மறக்க முடியவில்லையே… கோபமாக அவரை விட்டு விலகலாம் என்றாலும், எங்கெங்கு பார்த்தாலும் அவர் நினைவாகவே இருக்கிறதே” என்று அவள் கிறங்கும் இந்தக் காட்சிகளை, இசையாலேயே புரிய வைக்க வேண்டும் என்பது சாதாரண காரியம் அல்லவே. காட்சியின் தாக்கத்தை, புல்லாங்குழலிலேயே ஒரு அகநாநூறாக எழுதிவிடுகிறார் இசைஞானி. பிரிவாற்றாமையை இசையில் செதுக்கி விடுகிறார், ராஜா! மீண்டும், திரும்ப திரும்ப கேட்டுப் பாருங்கள் :). முடியுமா? அட பாட்டு BGMஏ போட்டிருந்தா கூட, இதென்ன பெருசுன்னு தட்டி கழிச்சுடலாம். ஆனால், இது? முடியுமா? How can you express the mental torment of her feelings musically? Well, that is precisely what Ilaiyaraaja is doing right here.

பகுதி 4 – “முடிவுக்கு வந்துட்டேன். பாவம் அவரு. இந்த உசுரு அவருக்கே!” (1:17 to 1:57 marker)

மீண்டும் அதே டியூன் தான் இங்கேயும். இப்ப அந்த orchestrationல் காட்டப்படும் variationஐ பாருங்கள். உங்களுக்கும் இப்படி தோன்றுகிறதா என்று தெரியலை, ஆனா எனக்கு, இது எல்லாமே ஒரே டியூன்னுன்னு என் மூளைக்கு சொன்னா, அது என்னை கெட்ட வார்த்தையில திட்டுது, “அட போடா மடையா, எல்லாமே வேற வேற tunes for varying moodsன்னு“. நம் மூளையையே confuse பண்ணும் மூளைக்கு சொந்தமானவர் என்ற காரணத்தினால் தான் அவர் இசை”ஞானி”யோ? ஒரு மென்சோக வயலினோடு, புல்லாங்குழல் அவளுக்கு கிடைத்த தெளிவை மிக அழகாக பிரதிபலிக்கிறது. போய் அவருகிட்ட, “I love you” சொல்லிடனும்னு தீர்மானிச்சுட்டா! தெளிவு வந்தாச்சு!

பகுதி 5 – “Climax – பிணிக்கு மருந்து, கிடைத்தாயிற்று – புணருதல் :)” (1:58 to 3:28 marker)

மனங்கள் இணைந்த பின், இணைய வேண்டியது உடல்கள் தானே? அட இந்த மாதிரி காட்சிக்கு சும்மா “அல்வா” சாப்பிடற மாதிரி இசைஞானி தூள் கிளப்புவாறே. இங்கேயும் சும்மா விடுவாரா என்ன? அவளின் மனப் போராட்டத்தை, அவள், இவன் முன் தனது வேள்வியிலே தோல்வியுற்றதை (அதாவது, அவனை மறக்க வேண்டும், மறுக்க வேண்டும் என்ற வேள்வியில் இருந்து தவறிவிட்ட தோல்வியை) ஒத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. அழுகிறாள். அவள் மனம் படபட எனத் துடிக்கிறது. அதை மிருதங்கத்தில் நம் கட்டித் தங்கம் கொட்டி காட்டுகிறது. போதாததுக்கு சந்தூரில் வேறு சிந்து பாடுகிறார் நம் ராஜா! ராஜா மட்டும் இங்கிருந்தால் அவர் கால்களுக்கு தருவேன் 1000 முத்தங்கள். ராசாய்யா நீரு…யப்பா…மனுசனே இல்லை…என்ன ஒரு இசை ராஜ்ஜியத்த ஒண்ணுமில்லாம ஒரு சீன்ல காட்டிவிட்டீர்! Anyway, she confesses her failure and expresses her love to him. The emotional torture she subjects herself is fully expressed in 100% Carnatic Classical music with Mridangam doing the lead, backed-up adequately by Santoor! அங்கே ஆரம்பமாகுது பாருங்கள் chorus — what a lovely chorus. This chorus will give complete backing to the best segment that follows with Veena!

எனக்கு மிகவும் பிடித்த BGM segment இது. அவர் எங்கெங்கெல்லாம் வீணையை வைத்து விளையாடி இருக்கின்றாரோ, அது அனைத்தும் எனக்கு அலாதி பிரியம். ஞாபகம் இருக்கிறதா, முதன் முதலில் நாம் ஆரம்பித்ததும், பின்னர் ஒரு போதையூட்டும் பாடலுக்கு வீணையை கிடார் ரேஞ்சுக்கு பட்டையை கிளப்பியதையும் ரசித்தோமே? அதே மாதிரி இங்கே வீணையை, he uses as though it is a guitar, literally plucking to create a sensuous effect. And boy, how he marvels with that lovely, romantic, sensuous sound it produces. Enjoy that in the markers: 2:46, 2:47, 2:49, 2:53, 2:56, 2:58, 2:59, 3:01, 3:03, 3:06, 3:08, 3:09, 3:11… என்று அது பாட்டுக்கு போவதைப் பார்த்தீர்களா? The unconventional way, he uses a traditional Veena instrument is amazing for its creative exuberance. Literally, the Veena sounds like an electric-guitar. What an ingenuity! ஆனால், எதையுமே அளவாகவும், காரணமாகவும் செய்யும் ராஜா, இதற்கும் காரணமாகவே இந்தக் கருவியை பயன்படுத்தி இருக்கின்றார். காட்சியில், காதலனும் காதலியும் உடல் இணைகிறார்கள். இயக்குநர் ஒரு “பலே” ஆசாமி — மூடி இருக்கும் வீணையை, அவிழ்ப்பது போன்று சூசகமாகவும், கலை உணர்வோடும் காட்சியை அமைக்க, சும்மா போக்கத்தப் படங்களுக்கே மெனக்கெடும் இசைஞானிக்கு, இது இன்னும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். அதான் வீணையில் வினை இல்லாமல் பூந்து ஆடிவிட்டார்.

அம்புடுதேன். பதில் சொல்லுங்க. சொல்லிடுவீங்க. ஆனால், இந்த இசையை எப்பவும் கேட்டு ரசிங்க. BGMல வார்த்தைகளின் உதவியின்றி அவர் காட்டும் உணர்ச்சிகளின் குவியல், தமிழர்களுக்கு என்றுமே நெஞ்சில் உரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழன் ஏடுகளில் கணியன், பரணன், கம்பன், ஒளவையார் என்பது போல இசைஞானியும் வைக்கப்படுவார்…இல்லையா?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

பி.கு. பல முறை இரைச்சல் நீக்கப்பட்ட கோப்பு (encoded). இரு இடங்களில் புதிருக்காக வசனம் அகற்றப்பட்டது.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Kaviarasu Vairamuthu’s lyrics won critical acclaim in this movie 🙂

Answer: Sindu Bhairavi ( சிந்து பைரவி ) Thanks to @gopi37, I came to know that @kanapraba already has a dedicated page for Sindu Bhairavi BGMs. So, I am linking it directly to that site. Pay attention to the following tracks there ( When you hear the actual tracks, you will understand the difference noise-removal techniques make to a track, at the time of encoding. ):

NB: Following description of tracks are @kanapraba’s, taken from his site for you to land into the right tracks.

  1. பாடலைக் கேட்டு ஜே.கே.பி “உன்னுடைய இசைக்கு அடிமையாகிவிட்டேன்” என்று சொல்லி சிந்துவின் கையில் தன் கல்யாண மோதிரத்தை அணிவிக்கப் படத்தின் மூல இசை புல்லாங்குழலில் துள்ளுகிறது
  2. சிந்துவின் மனதில் ஜே.கே.பி இப்போது காதலனாக மாறும் தருணம் புல்லாங்குழல் அவள் மனதின் தூதுவனாக
  3. சிந்து தன் உள்ளக்கிடக்கையை ஜே.கே.பியிடம் சொல்லி இணையும் வேளை தத்தளிக்கும் மனவுணர்வை மிருதங்க இசையில் ஆரம்பித்து மெல்ல மெல்ல இரு மனமும் சேரும் போது ஒத்துழைக்கும் இசை ஆர்ப்பரிப்பு. படத்தின் உச்சபட்ச பின்னணி இசை இதுதான்

Enjoy 🙂

Advertisements