Tags

, , , , , , , , , , , , , , ,

அருமையான 70s/80s டூயட் பாடலான 37/365 அடுத்து, இன்றும் அதே பீரியட் படப்பாடல் தான் புதிர். இந்தப் படம் வந்த புதிதில் தான், அதிகம் திரைப்படங்களுக்கு அந்தப் படத்தின் top பாடலைப் போட்டு விளம்பரம் செய்யும் பழக்கம் அதிகம் புழக்கத்தில் வர ஆரம்பித்திருந்தது. நான் வளர்ந்த கோயம்புத்தூரில் விவித-பாரதி வர்த்தக சேவை எல்லாம் இல்லை. சாதாரண ஒளிபரப்பு தான். அதில், இம்மாதிரி விளம்பரங்கள் வர ஆரம்பித்தது புதுமை தான். இந்தப் பாடலினாலேயே, படம் பார்க்கப் போனவர்கள் அதிகம் என்பது உண்மை.

சரி பாடலுக்கு வருவோம். அருமையான மாலை நேர மயக்கத்திலே அம்சமான வசந்தா ராகத்தில் அமைந்த பாடல் இது. (நான் கர்நாடக சங்கீத expert இல்லை, so, please take it with a pinch of salt :-)) பாரதிராஜா கொண்டு வந்த தேவதைகள் பார்முலா, இந்தப் பாடலில் உண்டு. தேவலோக பரவசம் தொற்றிக்கொண்டால் அதிலிருந்து வெளியே வர மாமுனிகளினாலும் கூடாத காரியம். அப்படிப்பட்ட ரம்பைகளின் humming இந்த sequenceன் கடைசியில் வருவதை பாருங்கள். அருமை! ஆரம்பம், அழகாக solo violins இரண்டு, தனித்தனி trackல். அதற்கு பின் உடனடியாக flute பிக்-அப் எடுக்கிறது. அதை தொடர்ந்து சந்தூரில் கிண்டி எடுக்கிறார் இசைஞானி.

அருமையான இப்பாடலை கண்டுபிடியுங்களேன்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This duet-song featured Actress Nalini.

Answer: Maan Kanden (மான் கண்டேன் ) from Rajarishi(ராஜரிஷி) (1985)