Tags

, , , , , , , , , , , , , , ,

After a relatively easy, solo, romantic song in 36/365 that some of you mentioned having heard it for the first time and fallen love with it, we are heading back to the 70s/80s era today. இந்தப் பாடலின் specialtyயே, காலத்தை கடந்து, இன்னும் நேற்றைய இசை போல இருப்பது தான். இசைஞானி இசைத்த எவ்வளவோ டூயட் பாடல்களில் இது ஒரு தனி என்றே சொல்லலாம். ஆரம்பமே அவ்வளவு தூக்கலாக ஆரம்பிக்கும். பாடலை கண்டுபிடித்தவுடன், தவறாமல்,நல்ல தரமான recordingல் இந்தப் பாடலை headphones/speakersல் கேட்டுப் பாருங்கள். அந்த அருமையான bass-guitar interludes பாடல் முழுக்க ilaiyaraajarulesனு போகும். அவ்வளவு அழகு.

புதிராக நான் இன்று அளித்திருக்கும் track, full instrumentalலிருந்து ஒரு பகுதியே. “நீ தானே என் பொன்வசந்தம்” மகிழ்ச்சியில் இருக்கிறோம்…, ஆனால் 80களிலும் இம்மாதிரி ஜாலி சங்கதிகளை ராஜா எப்படி smoothஆக கையாண்டிருக்கிறார் என்பதை நினைவு படுத்தவே, பாடலின் original instrumental versionஐ encode செய்து, போட்டிருக்கின்றேன். இதற்கு வேறொரு காரணமும் உண்டு. அந்தக் காலத்தில், ராஜாவின் பாடல்கள் Echo இசைத்தட்டுக்கள் மற்றும் ஒலி நாடாக்களாக வந்த போது, இம்மாதிரி சில instrumental tracks வரும். ஆனால், பிற்காலத்தில் அது அடியோடு நின்றுவிட்டது. இன்று கூட நிறைய ராஜா ரசிகர்கள், இம்மாதிரி original instrumental versions கிடைக்காதா என்று தவமாய் தவம் இருக்கின்றனர். ஆனால், அது ஏனோ ராஜா சாரின் காதுகளுக்கு எட்டுவதில்லை. படத்தின் tracksஉடன், பாடலின் instrumental tracksஐ வெளியிட்டால் எத்தனை அழகாக இருக்கும் என்பதற்கு இது ஒரு sample. அவ்வளவே.

பாடலில், ஆண்-பெண் குரல்களை வேற்றுமை படுத்த, எவ்வளவு அழகாக Flute and Saxophone என்று தனி இசை ராஜாங்கத்தையே படைத்திருக்கின்றார் பாருங்கள். அத்தோடு தபேலா, மிருதங்கம் மற்றும் chorusன் அழகான humming என்று நீரோடை போகும் இந்தப் பாடல் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடித்ததாகவே இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. எவ்வளவுக்கு எவ்வளவு, இந்தப் பாடலின் இசை அழகோ, அவ்வளவுக்கு அவ்வளவு, இதை படமாக்கும்போது குதறி எடுத்து விட்டார்கள் என்பது தான் இப்பாடலின் ஒரே குரை…..sorry குறை🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This duet song featured Actor Rajeev. இந்தப் பாட்டுல ராஜீவ் cameo roleல வருவார். பட hero வேற.

Answer: Ilamanathu Pala Kanavu (இளமனது பல கனவு) from Selvi(செல்வி) (1984)