Tags

, , , , , , , , , , , , , , , ,

முதன்முறையாக நம் புதிரில், சோகப் பாடலை அறிமுகப்படுத்துகின்றேன். என்னுடைய பல நண்பர்கள், இசைஞானி பிரியர்கள். அனால், அவர்களில் சிலருக்கு அவருடைய சோகப்பாடல்கள் கேட்பதில் அவ்வளவு வேட்கை இருந்ததில்லை. பிடிக்கவில்லை என்று இல்லை. கேட்க மனது இடங்கொடுக்கவில்லை என்று பலமுறை பாவசங்கீர்த்தனம் செய்திருக்கின்றார்கள். எனக்கு அப்படி இல்லை. இசைஞானியின் அசத்தலான ரேப் ஸ்டைலில் காட்டுறேன் காட்டுறேன், பாத்துக்க பாத்துக்க வும் விரும்பி கேட்பேன், கமலம் பாத கமலமும் மெய்மறந்து கேட்பேன். இவைகளைப் போலவே அவருடைய சோகப்பாடல்களும். இந்த varietyஇல் தான் அவர் எங்கோ ஒரு உயரத்தில் இருக்கின்றார். அதைக் காட்டும் விதமாகத் தான், நேற்றைய துள்ளலுக்கு அடுத்த புதிராக இன்று சோகப்பாடல்.

இந்தப் பாடல், மிக அழகான ஒரு பாடல். சோகத்தின் நடுவே, ஆறுதல் தரும் விதமாக அமைந்திருக்கும் பாடல். அதை இசைஞானி, இசையின் மூலம் புரியவைத்திருப்பது தான் விந்தையிலும் விந்தை. விடை தெரியும்போது, இந்த விமர்சனத்தின் பொருள் புரியும். 90களின் அருமையான முத்து. அந்த வயலின் இசையை ரசித்துக்கேளுங்கள். இதில் வரும் அந்த “கிண்கிணி” இசையொலி, எந்த கருவி என்று யாரவது தெளிவிக்க முடியுமா? இசைஞானி நிறையப் பாடல்களில், குறிப்பாக 90களில் வந்தப் பாடல்கள் பலதில் பயன்படுத்தியிருப்பார்.

பலருக்கு இவருடைய சோகப் பாடல்கள், இதயத்தை வருடி பத்து போடும் ஒரு அன்பு நிவாரணி. சோகங்கள் கூட சுகமாகும், இசைஞானி இளையராஜாவின் (சோகப்) பார்வையிலே.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

1st stanza of this song has male solo voice, while 2nd stanza has the female voice joining the male pathos.
Addon clue 2: Maestro sung this with another rarely used female singer.

Answer: Enakkena Oruvarum Ilaamal (எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்) from Thaalaattu(தாலாட்டு) (1993)