Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

At the outset, this song is pure bliss, romance, and absolute majesty! It is majestic to the core! எதற்காக இது “இசை(ஞானியின்)மழை”ன்னு பேர் வச்சிருக்கு? பல காரணங்கள், ஆனா, clueவ கவனிங்க. ஆரம்பிக்குது பாருங்க உறுமும் bass-guitarஉடன் அருமையான Piano வேறு. சரி, இது மட்டுமான்னு ஆஆன்னு வாய பொளந்துக்கிட்டு இருக்கும் போது, bass guitarsஓட,அட இதென்னப்பா, மிருதங்கம், தபேலா and நாகஸ்வரம்? பத்தாததுக்கு புல்லாங்குழல்? நம்மால புரிஞ்சுக்கவே முடியல, ஆனா, எப்படி இருக்குது பாருங்க! ஒரு முழு மீல்ஸ் அடிச்ச மாதிரி. இதுல கடைசில வர்ற ஹம்மிங் முந்திரி பாயசம் Dessert மாதிரி. இது மட்டுமா இல்ல இன்னும் வேற சில கருவிகளும் போட்டு தாக்க இருந்தீரோ இசைஞானியே?

தபேலா பாட்டுக்கு ஜதிய ஏத்திக்கிட்டே போக, நாகஸ்வரமும் மிருதங்கமும் அதற்கு ஈடு கொடுக்க…ஹும்..என்ன சொல்றதுன்னு தெரியல… இந்த clue stop ஆகும் போது கண்டிப்பா எல்லாரும் திட்டுவீங்க என்னைய, தியேட்டர்ல கரண்ட் கட் ஆச்சுனா விசில் அடிபாங்களே, அது மாதிரி! “ஏன்டா பாட்ட நிறுத்துன”ன்னு. அந்த அளவுக்கு இதை கேட்க கேட்க, வேறு ஒரு உலகத்துல இருப்போம்!

இந்த ஒரு 30-நொடி sequence போதும்யா…இந்த வாரம் மட்டுமில்ல, மாதம் மட்டுமில்ல, காலம் பூரா நெனச்சு பாக்க. இல்ல, நாகஸ்வரம், தபேலா, குழல் இருக்கும் ஒரு சூழலில், எங்கய்யா இசைஞானி Pianoவை கொண்டு வந்தார்? Pizza மேல முருங்கைக்காய் சாம்பார் ஊத்தற மாதிரின்னு எல்லாரும் பயப்படுவாங்க. இவரு என்னடான்னா conventions எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு, நான் காட்டறேன், எல்லாமே fit ஆகும் பாருங்கற மாதிரி அவ்வளவு ஒரு பக்குவம். ஆங்கிலத்தில் simpaticoனு சொல்லுவாங்களே. அது மாதிரி, அவ்வளவு நேர்த்தியான இசை. படத்துக்கும், குறிப்பாக இந்த பாடலுக்கும் ஏற்றாற்போல் இவர் காட்டியிருக்கும் உணர்ச்சி கொந்தளிப்பு, இவருடைய இசையால் மட்டுமே சாத்தியம்.

இசைஞானி உடைய பாடல்களில் பல கருவிகள் முன்னணி வகித்தாலும், தபேலாவை அடிக்கடி பார்க்கலாம். ஆனால் இந்த பாடலில் அந்த தபேலாவின் ஆளுமை சற்றே அதிகமாக இருக்கும். காட்சிக்கு பொருந்த அது இருக்கும். அந்த அழகை ரசிக்க அதிகப்படியான bass வேண்டும். அதற்காகவே இந்த clueவை encode செய்து, இரைச்சலை நீக்கி volume maximize பண்ணி இருக்கிறேன். இதை நீங்கள் headphones இல் கேட்டால், அருமையாக இருக்கும். ராஜா அருமையாக, இரு தனித்தனி tracksஇல் இசைத்து வடித்திருப்பார்! மற்ற இணையதளத்திலும் இந்தப் பாடலை stereo-split ஒலியால் ரசித்து மகிழலாம். ஆனால், இந்த பதிவேற்றத்தில் கண்டிப்பாக அந்த bass ஒலியின் ஆழத்தை ருசிக்கலாம். அதன் பின்னர் இணையத்தில் உள்ள versionsஐயும் கேட்டால், வித்தியாசத்தை நீங்கள் நன்றாக உணரலாம். இசைஞானியின் கணக்கிலடங்கா பாடல்கள் இம்மாதிரி treatmentக்காக கேட்பாறற்று கிடக்கிறது. வருங்காலத்துக்காக ஏதேனும் செய்ய இயலுமா என்ற கேள்விக்கு இன்றைக்கே ஒரு விடை கிட்டாவிட்டாலும், இந்த Clue சுலபமானது தான். அதற்கு பதில் சுட்டுங்கள், பின்னூட்டமாக! 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This hero and heroine had children, who became hero and heroine themselves later 🙂

 

Answer: Ponvaanam Panneer Thoovuthu (பொன்வானம் பன்னீர் தூவுது) from Indru Nee Naalai Naan (இன்று நீ நாளை நான் ) (1983).

Advertisements