Tags

, , , , , , ,

இந்தப் பாடலை கேட்டவுடன் அறிந்துகொள்ளும் ராஜா ரசிகர்கள் அதிகம். கேட்டிராதவர்கள் தங்களை மெய்மறந்து ரசிக்கப்போவதும் அதிகம். எது எப்படியோ, இந்தப் பாடல் கண்டிப்பாக இன்று முழுவதும் நம் அனைவரின் நினைவிலும் நீங்காமல் இருக்கும். சங்கதிகளைப் பாருங்களேன். இது ஒரு டூயட் பாடல். இதில், ஆரம்பத்தில் வரும் அந்த துள்ளல் கிடார் 17 நொடிகளுக்கு அசத்திவிட்டு, புல்லாங்குழலோடு இணைந்துவிடுகிறது. அந்த 17-31 நொடிகளில் திடீரென்று ஒரு வித சோகம் கலக்குமாறு ஒரு pathos noteல் புல்லாங்குழல் இசைக்கிறது. ஏன்? தெரியல. ஆனா சுகமா இருக்கு. இது என்னடான்னு நெனக்க, வியக்க, 31 நொடியில beatsஐ ராஜா takeoff கொடுக்க, தொடர்ந்து நம் உள்ளத்தில் மீண்டும் குஷி உண்டாகி ஒருவித பரவச நிலைக்கு போய்டறோம். இல்லையா? Truly, Raaja is a master-player of peoples’ sensibilities and feelings with his choice of sounds, notes, and instruments. இல்லையென்றால் இந்த ஒரு 40-நொடி sequenceக்கு ஏன் இந்த மனிதர் இவ்வளவு மெனக்கெடணும்?

1980களில் ஆல் இந்திய ரேடியோவில் + சிலோன் ரேடியோவில் இப்பாடல் இசைக்காத நாள் இல்லை என்று சொல்லலாம். AIR தொண்டாற்றிய அளவுக்கு, இந்தப் பாடல்களை மக்களிடம் DD கொண்டு சேர்க்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இன்றும் உண்டு.

என்ன ஒரு பாட்டு. Hats-off, Raaja!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

பி.கு.: இப்புதிரின் ஒலியை Encoding செய்யவேண்டி இருந்தது, இரைச்சலை அகற்ற. இதைப் பற்றி முன்னோட்டமாக சுட்டியது இதோ.

Due to heavy popular demand to publish answer ahead of schedule, here it is and enjoy this fantastic song!

Answer:Poonthendral Kaatre Vaa Vaa (பூந்தென்றல் காற்றே வா வா, அதில் சேர்ந்தாடும் பாட்டே வா, நெஞ்சம் உனது தஞ்சம், கொஞ்சும் நினைவு மஞ்சம்) from Manjal Nilaa (மஞ்சள் நிலா) (1982).